இந்திய நிதி ஆணையம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இந்திய நிதி ஆணையம் (Finance Commission of India) 1951ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதி XII (12) இல் 280ஆம் பிரிவின்படி குடியரசுத் தலைவரால் நிறுவப்பட்டது. நடுவண் அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையேயான நிதிப் பகிர்தலை வரையறுக்க இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. 1951ஆம் ஆண்டின் நிதி ஆணையச் சட்டம் இவ்வமைப்பின் உறுப்பினர்களின் தகுதிகள், நியமித்தல் வரன்முறை,பதவிக்காலம் மற்றும் அதிகாரங்களை வரையறுத்துள்ளது. அரசியலமைப்பின்படி ஒரு தலைவரையும் நான்கு உறுப்பினர்களையும் கொண்ட நிதி ஆணையம் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்பட வேண்டும். இந்தியப் பொருளாதாரத்தின் முன்னேற்றம் மற்றும் மாறுதல்களுக்கேற்ப பல்வேறு நிதி ஆணையங்களின் பரிந்துரைகளும் பெரிதும் வேறுபட்டுள்ளன. இதுவரை பதின்மூன்று நிதி ஆணையங்கள் தங்கள் பரிந்துரைகளைக் கொடுத்துள்ளன.

விரைவான உண்மைகள் துறை மேலோட்டம், அமைப்பு ...
Remove ads

14 வது நிதி ஆணையம்

  • இந்திய அரசு ஜனவரி 2, 2013 அன்று 14 வது நிதி ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையம் 2015 - 2020 வரை செயல்படும்.
  • தலைவர் - யாக வேணுகோபால் ரெட்டி (Y.V.ரெட்டி), முன்னாள் ஆளுநர், இந்திய மைய வங்கி
  • உறுப்பினர்கள் - சுஷ்மா நாத், முன்னாள் நிதி செயலாளர்; ம.கோவிந்த ராவ் , இயக்குநர் , தேசிய பொது நிதி மற்றும் கொள்கைக்கான நிறுவனம்; சுதிப்டோ முன்டல்,முன்னாள் செயல் இயக்குநர், புள்ளியியல் நிறுவனம்.

நிதி ஆணையங்கள் ஒதுக்கீடுகள் 1 முதல் 15வரை

மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட வருமான வரியின் நிகர வருவாயின் சதவீதப் பங்கை பின்வரும் முறையில் இருக்க வேண்டும் என்று முதல் நிதி ஆணையம் முன்மொழிந்தது.[1]

மேலதிகத் தகவல்கள் State, % ஒதுக்கீடு ...
  • 2வது நிதி ஆணையம் 1957, 3வது நிதி ஆணையம் 1961, 4வது நிதி ஆணையம் 1965 and 5வது நிதி ஆணையம் 1969
மேலதிகத் தகவல்கள் State, 2nd FC % of share ...
  • 6வது நிதி ஆணையம் 1973, 7வது நிதி ஆணையம் 1978, 8வது நிதி ஆணையம் 1984 and 9வது நிதி ஆணையம் 1990
மேலதிகத் தகவல்கள் State, 6th Fin. Com. % of share ...
  • 10th Finance commission 1995, 11th Finance commission, 12th Finance commission, 13th Finance commission, 14th Finance commission and 15th Finance commission[2]
மேலதிகத் தகவல்கள் State, 10th FC % ...
மேலதிகத் தகவல்கள் State, 1st FC % (1952) ...

உசாத்துணை

  • Centre State Financial Relations in India and Finance Commission by Sansar Singh Janjua
Remove ads

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads