இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை

From Wikipedia, the free encyclopedia

இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை
Remove ads

இந்திய மருத்துவ ஆய்வு மன்றம் அல்லது இந்திய மருத்துவ ஆரய்ச்சி சபை (Indian Council of Medical Research - ICMR) என்பது உயிரியல் மருத்துவ ஆய்விற்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான உச்சபட்ச அதிகாரம் கொண்ட இந்திய நிறுவனம் ஆகும். இது உலகினுள்ள பழமையான மற்றும் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சிக் குழுக்களில் ஒன்றாகும். இந்த சபைக்கு தேவையான நிதியை இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் (இந்தியா)சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் வழங்குகிறது.[1][2]

விரைவான உண்மைகள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை (ICMR), சுருக்கம் ...
Remove ads

வரலாறு

1911 ஆம் ஆண்டில், இந்திய அரசால் இந்திய ஆராய்ச்சி நிதி சங்கம் (ஐஆர்ஏஏ) என்ற அமைப்பு நாட்டின் மருத்துவ ஆராய்ச்சியினை ஒருங்கிணைப்பதற்கான குறிப்பிட்ட நோக்கத்துடன் ஏற்படுத்தப்பட்டது. இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்த அமைப்பில் பல முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டன. 1949 ஆம் ஆண்டில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையாக (ஐ.சி.எம்.ஆர்) மாற்றியமைக்கப்பட்டது.

நிர்வாகக் குழு

சபையின் நிர்வாகக் குழு மத்திய சுகாதார அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த சபையில் உயிர்மருத்துவத் துறைகளில் நிபுணத்துவம் கொண்டவர்கள் உள்ளனர். எனவே தேவையானபோது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விஷயங்களில் உதவுகிறது. இந்தச் சபையின் வழிகாட்டுதலில் கீழ்க்கண்ட குழுக்கள் போன்றவை உள்ளன:

  1. அறிவியல் ஆலோசனை குழுக்கள்
  2. அறிவியல் ஆலோசனைக் குழுக்கள்
  3. நிபுணர் குழுக்கள்
  4. பணிக்குழுக்கள்
  5. திசைமாற்றக் குழுக்கள்

இது கவுன்சிலின் பல்வேறு ஆராய்ச்சி நடவடிக்கைகளை மதிப்பீடு செய்து கண்காணிக்கும் பணியினை மேற்கொள்கிறது.

Remove ads

செயல்பாடுகள்

விரிவான ஆராய்ச்சி மையங்கள், மேம்பட்ட ஆராய்ச்சிக்கான மையங்கள், சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றை, மருத்துவ கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும்பிற ஐ.சி.எம்.ஆர் அல்லாத பிற ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் உருவாக்கப்பட்டு உள்ளன.

மேலும் இந்த சபையின் நிதி உதவியின் மூலமாக தெளிவாக வரையறுக்கப்பட்ட இலக்குகளுடன், குறிப்பிட்ட கால இடைவெளிகளுடன், தரப்படுத்தப்பட்ட மற்றும் சீரான ஆய்வுகள் மேர்கொள்ளப்படுகின்றன. ஐ.சி.எம்.ஆர் அல்லாத ஆராய்ச்சி நிறுவனங்கள், மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள பல்வேறு விஞ்ஞானிகளிடமிருந்து பெறப்பட்ட மானிய-உதவி விண்ணப்பங்களின் அடிப்படையில் வெளிப்படையாக முடிவு எடுக்கப்பட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது. பல் மருத்துவ நிறுவனம், தில்லி மற்றும் NCRM ஆகியவற்றிற்கும் மற்ற நிறுவனங்களுடனும் கூட்டு ஆராய்ச்சி திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.[3]

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads