இந்திய லஞ்ச ஒழிப்பு இயக்கம் (2011)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திய லஞ்ச ஒழிப்பு இயக்கம் என்பது இந்தியாவில் தற்போது நடைபெற்றுகொண்டிருக்கும் லஞ்சம் மற்றும் முறைகேடுகளுக்கு எதிரான மக்கள் போராட்டம் ஆகும். இந்த இயக்கம் அண்ணா அசரே 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் ஐந்தாம் தேதி இந்த நோக்கத்திற்காக சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்ததிலிருந்து சூடுபிடிக்கத் தொடங்கி இன்று வரை நாடளவிலான மக்கள் எழுச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்திய குடிமக்கள் இந்த இயக்கத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு வருகின்றனர். இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் விரவியுள்ள இந்தியர்கள் இந்த இயக்கதிற்கான தங்களது ஆதரவை எதாவது ஒரு வடிவில் அளிப்பதன் மூலம் லஞ்சத்திற்கு எதிரான இந்த இயக்கம் பலமடைந்து வருகிறது.[1][2][3]
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையைப் புதுப்பிக்கவும். |
Remove ads
காரணங்கள்
பன்நெடுங்காலமகவே கறைபடிந்த இந்தியா அரசியல்வாதிகள் மீதும் கடமை செய்வதற்கே பணத்தை எதிர்பார்க்கும் சில அரசு ஊழியர்கள் மீதும் இருந்துவந்த வெறுப்பு, சமீபத்திய அரசியல் நிகழ்வுகளால் மேலும் அதிகரித்து மக்கள் வெகுன்டெழக் காரணமாகியது. இந்தியாவில் அவ்வப்போது தோன்றும் மாபெரும் ஊழல்களும் அரசியல் முறைகேடுகளும் தேச வளர்ச்சியில் முட்டுக்கட்டையாக இருப்பதை உணர்ந்த இந்தியக் குடிமக்கள் குறிப்பாக கல்வியறிவு பெற்ற இளைஞர்கள்
Remove ads
உடனடிக்காரனங்கள்
சமூக சேவகர் அண்ணா அசரே அறிவித்த சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் இந்த இயக்கம் நாடுதழுவிய இயக்கமாக வெடிப்பதற்கு முக்கிய காரணமாகும். இதேபோல் முன்னெப்போதும் இல்லாத வகையில் இணையதளம், சமூக வலைதளங்களின் தாக்கம், தொலைக்காட்சி ஊடங்களின் இடைவிடாத பிரத்யேக ஒளிபரப்புகள் போன்றவை இந்த இயக்கம் வெகுஜன இயக்கமாக மாற முக்கிய காரணிகள். இந்த ஆண்டின் தொடக்கத்தில் மத்தியகிழக்கு நாடுகள் சிலவற்றில் இரும்புக்கர ஆட்சிக்கு எதிராக ஏற்பட்ட மக்களின் எதிர்ப்பு போராட்டங்கள் மக்கள் சக்தியின் வெளிப்படக அமைந்தது. இதனைத் தொடர்ந்து இந்திய இளைஞர்களின் மனப்போக்கும் ஊழலுக்கு எதிராக ஒன்று திரண்டு அமைதிப் புரட்சியாக வெடித்துள்ளது. ஆனால் இதன் வெற்றி குறித்து இதுவரை கணிக்க முடியவில்லை.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads