இந்திரகாளியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திரகாளியம் என்னும் பெயரில் இரண்டு இலக்கண நூல்கள் உள்ளன. முந்தியது இசைத்தமிழ் நூல். பிந்தியது பாட்டியல் நூல்.
இந்திரகாளியம் இசைத்தமிழ் நூல்
இது பாரசவ முனிவரில் ஒருவரான யாமளேந்திரர் என்பவரால் செய்யப்பட்டது. [1]
இந்திரகாளியம் - பாட்டியல் நூல்
இந்திரகாளியம் என்பது ஒரு பாட்டியல் நூல் ஆகும் இது இந்திர காளியார் என்பவரால் இயற்றப்பட்டது. இவர் ஒரு சாக்தர் என்று யாமள இந்திரர் என்ற பெயராலும், பாரசவர் என்ற காளி கோயில் பூசாரி ஜாதியாலும் அறியப்படுகிறார். இந்த நூல் இப்போது முழுமையாகக் கிடைக்கவில்லை. பன்னிரு பாட்டியலிலும், நவநீதப் பாட்டியலிலும் இருந்து இதன் 40 பாடல்கள் வரை எடுக்கப்பட்டுள்ளன[2]. வச்சணந்திமாலை எனவும் வழங்கும் வெண்பாப் பாட்டியல் என்னும் பாட்டியல் நூல் இந்திரகாளியத்தை அதன் முதல் நூலாகக் குறிப்பிடுவதால் இந்நூல் அதற்கு முற்பட்டது ஆகும்.
Remove ads
குறிப்புகள்
உசாத்துணைகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads