இந்திரகிரி அரசு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திரகிரி அரசு அல்லது இந்திரகிரி சுல்தானகம் என்பது தற்காலத்தில் இந்தோனேசியாவின் ரியாவு மாகாணத்தின் இந்திரகிரி ஹிலிர் மாவட்டம், இந்திரகிரி ஹுலு மாவட்டம் என்பவற்றை உள்ளடக்கிய பகுதியிலிருந்த ஒரு மலாய சுல்தானகம் ஆகும். இவ்வரசு ஒரு காலத்தில் பகாருயுங் அரசின் கீழ் ஒரு சிற்றரசாக இருந்தது. எனினும், பிற்காலத்தில் ஜம்பி சுல்தானகம், சியாக் சுல்தானகம், அச்சே சுல்தானகம் என்பவற்றுடன் ஆதிக்கப் போட்டியில் ஈடுபட்டது.
Remove ads
பெயர்க் காரணம்
இந்திரகிரி என்னும் பெயர் சமசுக்கிருத மொழியிலிருந்து பெறப்பட்டதாகும். இங்கே இந்திரா என்பதன் பொருள் மன்னர் என்பதாகும். கிரி என்பதன் பொருள் மலை அல்லது உயர் தகைமை என்பதாகும். எனவே இந்திரகிரி என்பதன் பொருள் மலையரசன் என்பதாகும்.
தோற்றம்
1515 ஆம் ஆண்டு வரை இந்திரகிரி அரசும் அதன் துறைமுகப் பகுதியும் மினங்கபாவு மன்னரின் ஆளுகைக்குட்பட்ட சிற்றரசாகவே இருந்தது[1]. பின்னர் இந்திரகிரியின் உள்ளேயும் வெளிநாட்டினருடனும் தொடர்புகளைப் பேணுவதற்குரிய அதிகாரம் வழங்கப்பட்டது. அதன் பின்னரேயே இந்திரகிரி ஓர் இறைமையுள்ள சுல்தானகமாக மாறியது.
இவ்வரசு அமைந்த பகுதி குவாந்தான் அரசுடன் கடல் எல்லையைக் கொண்டிருந்தது. சுமாத்திராவின் உட்பகுதியில் அமைந்திருந்த மினங்கபாவு அரசின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்து வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்வதற்கான துறைமுகப் பகுதியாகவும் இது விளங்கியது. இதன் எல்லை சுமாத்திராவின் உள்ளே பத்தூர் ஏரி வரையும் கிழக்கு சுமாத்திராப் பகுதிகளும் உள்ளடங்கியதாகக் காணப்பட்டது.
Remove ads
உசாத்துணை
வெளித்தொடுப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads