இந்திராவதி தேசியப் பூங்கா
இந்தியாவின் சட்டீஸ்கர் மாநிலத்தில் பிஜப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தேசியப்பூங்கா From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திராவதி தேசியப் பூங்கா (ஆங்கிலம்: Indravati National Park) இந்தியாவின் சட்டீஸ்கர் மாநிலத்தில் பிஜப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்நகரில் ஓடும் இந்திராவதி நதியின் பெயரே இந்த தேசியப் பூங்காவிற்குச் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவில் அதிக அளவில் காட்டெருமைகள் காணப்படுகின்றன. இந்த மாநிலத்தில் இந்த தேசியப் பூங்காவில் மட்டுமே புலிகள் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பூங்காவின் பரப்பளவு சராசரியாக 2799.08 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இது 1981 ஆம் ஆண்டு தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. பின்னர் 1983 ஆம் ஆண்டு புலிகள் பாதுகாப்புத் திட்டம் அமுல்படுத்தப்பட்டது. இந்தியாவின் புகழ் பெற்ற புலிகள் காப்பகத்தில் இதுவும் ஒன்று ஆகும்.இந்தப் பூங்கா கடல் மட்டத்திலிருந்து 177 முதல் 599 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads