இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி (Indira Gandhi Medical College)(ஐ.ஜி.எம்.சி), முன்னர் இமாச்சலப் பிரதேச மருத்துவக் கல்லூரி (ஹெச்.பி.எம்.சி), என்று அழைக்கப்பட்ட இந்த மருத்துவக் கல்லூரி, லக்கர் பஜாரின் ஸ்னோடவுன் பகுதியில் அமைந்துள்ளது. இது இமாச்சலப் பிரதேச பல்கலைக்கழகத்துடன் இணைந்த அரசுக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரி ஆகும். மேலும் இது இமாச்சல பிரதேசத்தின் வில் உள்ள மருத்துவமனை ஆகும். 1966ஆம் ஆண்டில் இமாச்சலப் பிரதேச மருத்துவக் கல்லூரி என நிறுவப்பட்டது.[1] 1984ஆம் ஆண்டில் இதனுடைய பெயரானது இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி என மாற்றப்பட்டது.[1]
29 ஜூன் 2013 அன்று, இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி (ஐ.ஜி.எம்.சி) பிரதான் மந்திரி ஸ்வஸ்திய சேவா யோஜனாவின் (பி.எம்.எஸ்.எஸ்.ஒய்) கீழ் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) ஒப்புமை குறித்து மேம்படுத்தப்படும் என்று இமாச்சல பிரதேச சுகாதார அமைச்சர் கவுல் சிங் தாக்கூர் தெரிவித்தார். மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் உடனான சந்திப்பு குறித்து தாகூர் தெரிவித்ததோடு, ஐ.ஜி.எம்.சிக்கு எய்ம்ஸ் அந்தஸ்தை வழங்குவதற்கான முன்மொழிவு இந்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. ஐ.ஜி.எம்.சி.யை ஒரு மதிப்புமிக்க நிறுவனமாக அபிவிருத்தி செய்வதே மாநில அரசின் முயற்சியாகும், இதனால் மாநில மக்களுக்கு தரமான மற்றும் சிறந்த சுகாதார சேவைகளை வழங்க முடியும் என்று தாக்கூர் மேலும் கூறினார்.[2]
Remove ads
கதிரியக்க சிகிச்சை மற்றும் புற்றுநோயியல் துறை

இக்கல்லூரியின் கதிரியக்க சிகிச்சை மற்றும் புற்றுநோயியல் துறை இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட பிராந்திய புற்றுநோய் மையம் (ஆர்.சி.சி) ஆகும்.[2][3] இது 1977ஆம் ஆண்டில் மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை நிறுவனமாக நிறுவப்பட்டு 2001ஆம் ஆண்டில் பிராந்திய புற்றுநோய் மையமாக அங்கிகரிக்கப்பட்டது.[4]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads