இந்திரா கோஸ்வாமி
சாகித்திய அகாதமி விருது பெற்ற அசாமிய எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திரா கோஸ்வாமி என்ற இயற்பெயரால் அறியப்படும் மாமோனி ராய்சோம் கோஸ்வாமி (Mamoni Raisom Goswami, நவம்பர் 14, 1942– 29 நவம்பர் 2011) அசாமியர்களிடையே பரவலாக மாமோனி பாய்தியோ,[3] ஓர் அசாமிய எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், கவிஞர் மற்றும் அறிவுஜீவி ஆவார்.
1982ஆம் ஆண்டின் சாகித்திய அகாதமி விருதையும் [4] 2000ஆம் ஆண்டின் ஞானபீட விருதையும் [5] வென்றவர். 2008ஆம் ஆண்டு இவர் பெற்ற பிரின்ஸ் கிளாஸ் விருது இந்தியர் ஒருவருக்கான முதல் பரிசாக அமைந்தது.[6]
இந்திய இலக்கிய உலகில் ஓர் சமகால எழுத்தாளராக மிகவும் பாராட்டப்படும் இந்திரா கோஸ்வாமியின் படைப்புகளில் குறிப்பிடத்தக்கவையாக அந்துப்பூச்சி கடித்தழிந்த களிற்று அம்பாரி ([The Moth Eaten Howdah of a Tusker), சின்னமஸ்தாவிடமிருந்து வந்த மனிதன் (The Man from Chinnamasta),குருதி தோய்ந்த பக்கங்கள் (Pages Stained With Blood) ஆகியன உள்ளன.
இந்திரா கோஸ்வாமி சமூக மாற்றத்திற்காக தமது எழுத்துக்கள் மூலமாகப் பாடுபட்டவர். தடைசெய்யப்பட்டுள்ள பிரிவினைவாத குழுவான உல்ஃபா எனப்படும் அசாம் ஐக்கிய விடுதலை முன்னணிக்கும் நடுவண் அரசிற்குமிடையே இவர் மத்தியஸ்தராக ஆற்றியப் பணிக்காக பெரிதும் அறியப்படுகிறார். இவரது முயற்சிகளால் மக்கள் கலந்தாய்வு குழு என்ற அமைதிக்குழு உருவானது.
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads