இந்து தமிழ் திசை
சென்னையை தலைமை இடமாக கொண்ட தமிழ் நாளிதழ் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்து தமிழ் திசை (Hindu Tamil Thisai/Indhu Tamizh Thisai) என்பது தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் ஒரு நாளிதழ் ஆகும். இதன் முதல் பதிப்பு, 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் 16 அன்று வெளியிடப்பட்டது. சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இந்த நாளிதழ், த இந்து ஆங்கில நாளிதழின் ஒரு அங்கம் ஆகும்.[1] இந்த இதழுக்கு முதலில் இடப்பெட்ட பெயரான தி இந்து என்பது 2018 சூலை முதல் நாளில் இருந்து இந்து தமிழ் திசை என்ற தலைப்போடும் அதிகாரபூர்வமாக இந்து தமிழ் என்றும் பெயர் மாற்றப்பட்டது.[2][3]
Remove ads
தலைப்புகளும் துணைத் தலைப்புகளும்
தமிழகம், இந்தியா, உலகம், வணிகம், விளையாட்டு, சினிமா, சிந்தனைக் களம், பொது, சமூகம் போன்ற தலைப்புகளும், சிறப்புக் கட்டுரைகள், கலைஞர் பக்கம், கல்வி, தொழினுட்பம், நலமே நாடி, சுற்றுச்சூழல், ஆன்மீகம் போன்ற துணைத் தலைப்புகளையும் கொண்டு பளபளப்பான காகிதத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்படுகிறது.[4] 16 செப்டம்பர் 2016ல் தன் நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்தது [5]
தேசிய விருது
2014ஆம் ஆண்டு மே மாதம் 30, 31ஆம் தேதிகளில் கோவாவில் நடந்த கோவா உஃபெசுட்டு 2014 என்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் உலகம் உயிர் பெறும் உங்கள் மொழியில் என்ற விளம்பர வாசகத்திற்கு தேசிய தங்க விருது வழங்கப்பட்டது.[6]
மேற்கோள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads