இந்து மக்கள் கட்சி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இந்து மக்கள் கட்சி என்பது தமிழ்நாட்டிலுள்ள, இந்து சமயம் சார்ந்த ஒரு அரசியல் கட்சியாகும். இக்கட்சியின் தற்போதைய தலைவர் அர்ஜூன் சம்பத் ஆவார்.[1]

விரைவான உண்மைகள் இந்து மக்கள் கட்சி, தலைவர் ...

வரலாறு

ஆர். எஸ். எஸ், இந்து முன்னணி, பா.ஜ.க உள்ளிட்ட சங்க பரிவார் அமைப்புகளில் பணியாற்றிய அர்ஜூன் சம்பத்தால் 1993 ஆம் ஆண்டு, இந்து மக்கள் கட்சி அமைப்பு ரீதியாக தொடங்கப்பட்டது.

கோரிக்கைகள்

  • சாதி வெறியைத் தூண்டும் சங்கங்களைத் தடைசெய்ய வேண்டும்.
  • அனைத்து சூதாட்டங்களையும் தடைசெய்ய வேண்டும்.
  • மதுக்கடைகளையும், போதைப் பொருட்களையும் தடைசெய்ய வேண்டும்.
  • ஆபாசமாகப் பெண்களைச் சித்தரிக்கும் சினிமா, பத்திரிக்கைகளைத் தடைசெய்ய வேண்டும்.
  • அனைத்து மதத்தவருக்கும் பொதுவான சிவில் சட்டம் தேவை.
  • ஆலயங்களின் நிர்வாகத்தை அரசு மற்றும் அரசியல் சார்பற்ற அறவோர் வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
  • காவிரி ஆற்றில் தமிழகத்திற்குரிய பாரம்பரிய உரிமைகளைக் காப்பற்ற வேண்டும்.
  • கச்சத் தீவில் தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டும்.
  • ஊழல் அரசியல்வாதிகளின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டும்.
  • ஆறுகளைத் தேசியமாக்க வேண்டும்.
  • தென்னகத்தின் நதி நீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
  • காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள விசேஷ அந்தஸ்து போல், தமிழகத்திற்கும் வழங்க வேண்டும்.
  • பாகிஸ்தான் மீது போர் தொடுத்து ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரை மீட்க வேண்டும்.
  • இலங்கை மீது போர் தொடுத்து தனித் தமிழீழம் அமைத்திட வேண்டும்.
  • இந்து யாத்ரிகர்களுக்கும் ஹஜ் பயனிகளை போல உதவித் தொகை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழர் உரிமையை நிலைநாட்டுதல்.
  • சுற்றுச் சூழலுக்கு கேடு செய்யும் அனல் மின்சாரம் மற்றும் ஆபத்தை ஏற்படுத்தும் அனுமின்சாரம் ஆகியவற்றை எதிர்ப்பது, சூரிய ஒளி, காற்றாலை, நீர் மின்சாரத்தை ஊக்குவித்தல்.
Remove ads

அரசியல் நிகழ்வுகள்

  • தமிழ்த் திரைப்பட நடிகர்கள் பலர் மீது மதரீதியான மற்றும் பண்பாட்டு ரீதியான புகார்கள் கொடுத்துள்ளது.
  • கச்சத்தீவை இந்தியாவுடன் இணைக்கவும், தமிழீழ மக்களுக்கு ஆதரவாகவும், விடுதலைப்புலிகளை ஆதரித்தும் போராடி வருகிறது.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads