இந்தூர் துரந்தோ

From Wikipedia, the free encyclopedia

இந்தூர் துரந்தோ
Remove ads

இந்தூர் துரந்தோ அதிவேக விரைவு தொடருந்து மும்பை சென்ட்ரலை (BCT) இந்தூர் சந்திப்புடன் (INDB) இணைக்கும் ஒரு தொடருந்து சேவையாகும். தற்போது இந்த ரயில்சேவை 12227/12228 என்ற வண்டி எண்ணுடன் செயல்படுகிறது.

விரைவான உண்மைகள் இந்தூர் துரந்தோ விரைவுத் தொடருந்து, கண்ணோட்டம் ...
Remove ads

சேவைகள்

மும்பை – இந்தூர் பாதையில் விரைவாகச் செயல்படும் ரயில்சேவை இதுவே. 829 கிலோ மீட்டர் தூரத்தினை 12 மணி நேரம் 35 நிமிடங்களில் சராசரியாக மணிக்கு 65.88 கிலோ மீட்டர் வேகத்தில், 12227 துரந்தோ எக்ஸ்பிரஸ் சென்றடைகிறது. அதே போல் 829 கிலோ மீட்டர் தூரத்தினை 12 மணி நேரம் 40 நிமிடங்களில் சராசரியாக மணிக்கு 65.66 கிலோ மீட்டர் வேகத்தில், 12228 துரந்தோ எக்ஸ்பிரஸ் சென்றடைகிறது. இந்த இந்தூர் துரந்தோ எக்ஸ்பிரஸ் போலவே “அவந்திகா எக்ஸ்பிரஸ்” எனும் ரயில் சேவையும் மும்பை மற்றும் இந்தூர் இடங்களுக்கு இடையே செயல்படுகிறது.

Remove ads

கோச்சு விவரங்கள்

எட்டு ஏசி 3 டையர் கோச்சுகள், இரு ஏசி 2 டையர் கோச்சுகளும், ஒரு ஏசி முதல் வகுப்பு கோச்சும், ஒரு பேன்ட்ரி கார் மற்றும் 2 EOG கார்ஸ் கோச்சு என மொத்தம் 14 கோச்சுகள் உள்ளன. இந்தியன் ரயில்வேயின் வேண்டுகோளுக்கு இணங்க வழக்கமான கோச்சுகளை விட அதிகமான கோச்சுகளை இணைக்கவும், தேவையில்லாத கோச்சுகளைக் குறைக்கவும் இயலும்.

ரயில் விவரங்கள்

முதன் முறையாக 2011 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 28 ஆம் நாள் துரந்தோ எக்ஸ்பிரஸ் தனது சேவையினைத் தொடங்கியது. தொடக்கம் முதல் இன்று வரையே வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே செயல்படும் சேவையாக செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் முழுவதும் ஏசி (குளிரூட்டும்) வசதியுடன் அமைந்துள்ளது மற்றும் LHB ரேக் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இழுவை அல்லது இஞ்சின் விவரங்கள்

மும்பை சென்ட்ரல் மற்றும் வடோதரா சந்திப்பு ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதிகளில் WCAM 2/2P இஞ்சினை, ரயிலை இழுத்துச் செல்வதற்கு பயன்படுத்துகின்றனர். அதன் பின்பு ராட்லாம் சந்திப்பு வரை வடோதராவினை அடிப்படையாகக் கொண்ட WAP 4 இஞ்சின் இழுவைக்கு பயன்படுத்தப்படுகிறது. பின்னர் ராட்லாம் சந்திப்பினை அடிப்படையாகக் கொண்ட WDM 2 அல்லது WDM 3A இஞ்சின் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கு ரயில்வே, DC எலெக்ட்ரிக் ரயிலை முழுவதுமாக ஏசி கொண்ட (குளிரூட்டிய அறைகளைக் கொண்ட) ரயிலாக பிப்ரவரி 5 , 2012 முதல் மாற்றியது. தற்போது தொடர்ச்சியாக வடோதராவினை அடிப்படையாகக் கொண்ட WAP 4E அல்லது WAP 5 இஞ்சின் மும்பை சென்ட்ரலில் இருந்து இந்தூர் வரை இயங்குகிறது.

Remove ads

நிறுத்தங்கள்

இரு நாட்கள் பயணத்தில், தொழில்நுட்ப வேலைகளுக்காக இந்த எக்ஸ்பிரஸ் வடோதரா சந்திப்பு, ராட்லாம் சந்திப்பு, உஜ்ஜைன் சந்திப்பு போன்ற இடங்களில் நிறுத்தங்களைக் கொண்டுள்ளன.[1]

மேலதிகத் தகவல்கள் வரிசை எண், குறியீடு ...
Remove ads

வழிப்பாதை மற்றும் நிறுத்தங்களுக்கான நேரங்கள்

இந்தூர் துரந்தோ (வண்டி எண்-12227) [2]

மேலதிகத் தகவல்கள் எண், நிலையத்தின் பெயர் (குறியீடு) ...

மும்பை துரந்தோ (வண்டி எண்-12228) [3][4]

மேலதிகத் தகவல்கள் எண், நிலையத்தின் பெயர் (குறியீடு) ...
Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads