இந்தோனேசிய நாடாளுமன்ற வளாகம்

From Wikipedia, the free encyclopedia

இந்தோனேசிய நாடாளுமன்ற வளாகம்
Remove ads

இந்தோனேசிய நாடாளுமன்ற வளாகம் (ஆங்கிலம்: Parliamentary Complex of Indonesia (MPR/DPR/DPD Building); இந்தோனேசியம்: Dewan Perwakilan Daerah Republik Indonesia (Gedung MPR/DPR/DPD R) என்பது இந்தோனேசிய சட்டவைகளுக்காக உருவாக்கப்பட்ட அரசாங்கத்தின் கட்டிட வளாகமாகும்.[1][2]

விரைவான உண்மைகள் இந்தோனேசிய நாடாளுமன்ற வளாகம் Parliamentary Complex of Indonesia Kompleks Parlemen Republik Indonesia MPR/DPR/DPD Building, பொதுவான தகவல்கள் ...

இந்தோனேசிய நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சட்ட அவைகள்:

Remove ads

கட்டுமானம்

இந்தோனேசியாவின் முதல் அதிபரான சுகார்னோவால், 1965-ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி கட்டிடம் கட்ட ஆணையிடப்பட்டது. மார்ச் 1965 இல் கட்டுமானம் தொடங்கியது. சொஜோடி விர்ஜோமோஜோ (Soejoedi Wirjoatmodjo) எனும் கட்டிடக் கலைஞரின் தலைமையில் கட்டுமானம் நடைபெற்றது.

செப்டம்பர் 30, 1965-இல் நடந்த இந்தோனேசிய செப்டம்பர் 30 இயக்கத்தின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியால் கட்டுமானம் தடைபட்டது. நவம்பர் 9, 1966-இல் மீண்டும் கட்டுமானம் தொடங்கியது. படிப்படியாக, கட்டுமானம் முடிக்கப்பட்டு இந்தோனேசிய மக்களவை தலைமைச் செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.[3][4]

Remove ads

மாணவர் ஆர்ப்பாட்டம்

Thumb
மே 1998 கலவரத்தின் போது மாணவர்கள் கட்டிடங்களை ஆக்கிரமித்துள்ளனர்.

மே 1998-இல், இந்தோனேசிய நாடாளுமன்ற வளாகக் கட்டிடங்கள், ஏறக்குறைய 80,000 பல்கலைக்கழக மாணவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டன.[5] அதற்கு முன்னர், திரிசக்தி துப்பாக்கிச் சூடு (Trisakti Shootings); மற்றும் சுகார்த்தோவின் மேற்கத்திய சார்பு புதிய ஒழுங்குமுறை எனும் புதிய கட்டளை கொள்கைக்கு (New Order) எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இந்தோனேசிய மேலவை; மற்றும் 1998-2003-ஆம் ஆண்டின் இந்தோனேசிய மக்களின் கலந்தாய்வுப் பேரவை ஆகியவற்றைக் கலைக்க வேண்டும் என பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்தனர்.[6] பல்கலைக்கழக மாணவர்களின் இந்த ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர், அதிபர் சுகார்த்தோவின் ஆட்சி கவிழ்ந்தது.

Remove ads

கட்டிடங்கள்

கட்டிட அமைப்பு

Thumb
முதன்மைக் கட்டிடத்தின் உள்ளே நுசாந்தாரா மண்டபம்
Thumb
இந்தோனேசிய மக்களின் கலந்தாய்வுப் பேரவை மண்டபம்

இந்தோனேசிய நாடாளுமன்ற வளாகம் ஆறு கட்டிடங்களைக் கொண்டுள்ளது. முதன்மைக் கட்டிடம் நுசாந்தாரா (Nusantara). இந்தக் கட்டிடம் தனித்துவமான கருடனின் இறக்கை வடிவக் கூரையுடன்;[3] மற்றும் 1,700 இருக்கைகள் கொண்ட முழுமையான கூட்ட அரங்கத்தைக் கொண்டுள்ளது.

மற்ற ஐந்து கட்டிடங்கள்:

  • நுசாந்தாரா I (Nusantara I)
  • நுசாந்தாரா II (Nusantara II)
  • நுசாந்தாரா III (Nusantara III)

23-மாடி கட்டிடம்; இந்த மூன்று கட்டிடங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்கள்; மற்றும் கூட்ட அறைகள்; இவற்றுள் குழு சந்திப்பு அறைகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளன;

  • நுசந்தாரா IV (Nusantara IV); மாநாடுகள் மற்றும் விழாக்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது
  • நுசந்தாரா V (Nusantara V); 500 இருக்கைகள் கொண்ட முழுமையான அரங்கத்தைக் கொண்டுள்ளது.

காட்சியகம்

இந்தோனேசிய நாடாளுமன்ற வளாகத்தின் காட்சிப் படங்கள்

மேற்கோள்கள்

சான்றுகள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads