இந்த நிலை மாறும்

2020இல் வெளியான தமிழ் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

இந்த நிலை மாறும்
Remove ads

இந்த நிலை மாறும் (Indha Nilai Maarum) என்பது 2020ஆம் ஆண்டு வெளியான பரபரப்பூட்டும் திரைப்படமாகும். இதை அறிமுக இயக்குநர் அருண்காந்த் வி இயக்கியிருந்தார். இப்படத்தில் அஸ்வின் குமார் லட்சுமிகாந்தன், ராம்குமார் , நிவேதிதா சதீஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

விரைவான உண்மைகள் இந்த நிலை மாறும், இயக்கம் ...
Remove ads

நடிகர்கள்

தயாரிப்பு

ராம்குமார், அஷ்வின் குமார் லட்சுமிகாந்தன் மற்றும் நிவேதிதா சதீஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பில் 2017ஆம் ஆண்டு படத்தின் தயாரிப்பைத் தொடங்கியது.[2] ஒய். ஜி. மகேந்திரன் ஒரு வில்லன் கதாபாத்திரத்திலும் லட்சுமி ராமகிருஷ்ணன் அவருக்கு உதவியாகவும் நடித்திருந்தனர்.[1] தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் படம் உருவானது.[3]

இப்படத்திற்கான பாடல்களுக்கு அருண்காந்த் வி. இசையமைத்திருந்தார்.

வெளியீடும் விமர்சனமும்

இந்தத் திரைப்படம் 6 மார்ச் 2020 அன்று திரையிடப்பட்ட இது [4] எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. தி டைம்ஸ் ஆஃப் இந்தியாபடத்திற்கு ஐந்து நட்சத்திரங்களில் ஒன்றை மட்டுமே வழங்கியது. மற்றும் "படம் எல்லா வகையிலும் விரும்பத்தகாதது, மேலும் பயங்கரமான பகுதி என்னவென்றால், காட்சிகள் மோசமாக அரங்கேற்றப்பட்ட நாடகம் போல் தோன்றுகிறது" என்றும் கூறியது.[5] மாலை மலர் படத்தின் நோக்கத்தைப் பாராட்டியது.[6] தினத்தந்தி இயக்கம், ஒளிப்பதிவு, பின்னணி இசை ஆகியவற்றைப் பாராட்டியது.[7]

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads