இன்கா பேரரசு

From Wikipedia, the free encyclopedia

இன்கா பேரரசு
Remove ads

இன்கா பேரரசு (Inca Empire) என்பது கொலம்பிய காலத்துக்கு முற்பட்ட அமெரிக்காவின் ஒரு பேரரசாகும்.[3] கொலம்பசின் வருகைக்கு முந்தைய காலத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய பேரரசாக இது விளங்கியது.[4] இப்பேரரசின் தலைநகரம் குசுக்கோ ஆகும். 13ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெருவின் உயர் பிரதேசத்தில் இப்பேரரசு அமைக்கப்பட்டது. 1438 முதல் 1533 வரையான காலப்பகுதியில் தென்னமெரிக்காவின் மேற்குப் பகுதிகள், ஆண்டீஇய மலைத்தொடரை மையப்படுத்திய பகுதிகள், தற்போதைய எக்குவாடோர், பெரு ஆகியவற்றின் பெரும் பகுதிகள் பொலீவியாவின் மேற்கு மற்றும் தென்மத்திய பகுதிகள், ஆர்ஜெண்டீனாவின் வடமேற்குப் பகுதி,சிலியின் வடக்கு மற்றும் வடமத்தியப் பகுதிகள் கொலம்பியாவின் தெற்குப் பகுதி போன்ற பெரு நிலப்பரப்பை இன்காக்கள் அமைதி வழியிலும், பலாத்காரமாகவும் கைப்பற்றி இன்கா பேரரசுடன் இணைத்திருந்தனர். இன்காக்கள் தமது அரசரை "சூரியனின் மகன்" என அழைத்தனர்.

Thumb
இன்கா பேரரசு (1438–1527)
விரைவான உண்மைகள் இன்கா பேரரசுInca Empireதவான்டீன்சுயூ, நிலை ...

உள்ளூர் மொழிகள் மற்றும் நூற்றுக்கணக்கான வட்டார வழக்குகள் பேசப்பட்டன என்றாலும் இந்த பேரரசின் அதிகாரப்பூர்வ மொழி கெச்வா ஆகும். இன்காக்கள் தங்கள் பேரரசை டவாண்டின்சுயு என குறிப்பிட்டனர். இதற்கு "நான்கு ஐக்கிய மாகாணங்கள்" அல்லது "நான்கு மண்டலங்கள்" என்று பொருள்.

Remove ads

வரலாறு

12-ஆம் நூற்றாண்டு வாக்கில் பழங்குடியினராக இருந்த இன்கா மக்கள் மன்க்கோ கப்பாக் என்பவரின் கீழ் குசுக்கோ என்ற சிறிய நகர அரசை அமைத்தனர். பின்னர் சாப்பா இன்கா பச்சாகூட்டெக்கின் காலத்தின் இது மேலும் விரிவடைந்தது. இவரும் இவரது மகனும் இவரது ஆட்சிக்காலத்தில் ஆண்டீய மலைத்தொடரின் பெரும்பகுதியை இன்காக்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.[5]

தோற்றம்

இன்காக்களின் வாய்மொழி வரலாறு மூன்று இடங்களில் மூன்று குகைகள் குறிப்பிடுகிறது. மைய குகை, டம்போ டோக்கோ, கெபாக் டோக்கோவை பின்பற்றி பெயரிடப்பட்டது. மற்ற குகைகள் மரஸ் டோக்கோ மற்றும் சுடிக் டோக்கோ.[6] நான்கு சகோதரர்கள் மற்றும் நான்கு சகோதரிகள் மத்தியி குகையிலிருந்து வெளியே வந்தனர். அவர்கள்: அயர் மன்கோ, அயர் சாசி, அயர் ஏர்ஜியா, மற்றும் அயர் உச்சு மற்றும் மாமா ஒக்லோ, மாமா ரவுவா, மாமா ஹுவாகா, மற்றும் மாமா கோரா. பக்க குகைகளிருந்து அனைத்து இன்கா மக்களின் முன்னோர்களாக இருக்கும் நபர்கள் வெளியே வந்தனர்.

அயர் மன்கோ சிறந்த பொன்னால் செய்யப்பட்ட ஒரு மாய தடியை வைத்திருந்தார். இந்த தடி இறங்கிய இடத்தில், மக்கள் வாழ வேண்டும். அவர்கள் ஒரு மிக நீண்ட நேர பயணம் மேற்கொண்டனர். வழியில், அயர் சாசி அவரது பெரும் பலம் மற்றும் அதிகாரத்தை பற்றி பெருமையாக பேசினார். அதனால் அவரது சகோதரர்கள் அவரை ஏமாற்றி ஒரு புனிதமான பொதி ஒட்டகத்தை பெற குகைக்கு திரும்பி அனுப்புகின்றனர். குகைக்கு சென்ற போது, அவரை அவர்கள் உள்ளே மாட்டி கொள்ள செய்து விடுகின்றனர்.

அயர் உச்சு இன்கா மக்களை பார்த்து கொள்வதற்காக குகை மேல் இருக்க வேண்டும் என முடிவெடுத்தார். அதை பிரகடன படுத்திய நிமிடம், அவர் கல்லாக மாறினார். அந்த கல்லை சுற்றி ஒரு கோவில் கட்டப்பட்டது. பின்னர் அது ஒரு புனிதமான தளமாக மாறியது. அயர் ஏர்ஜியா இதையெல்லாம் கண்டு வெறுப்படைந்து தனியாக பயணம் செய்ய முடிவு செய்தார். அயர் மன்கோ மற்றும் அவரது நான்கு சகோதரிகள் மட்டுமே இருந்தனர்.

Remove ads

சமூகம்

Thumb
மச்சு பிச்சு

மக்கள்

சுமார் 4 மில்லியன் பேரிலிருந்து 37 மில்லியன் வரை இன்கா மக்கள் தொகை இருந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளாது. இன்காக்கள் சிறந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவுகளை வைத்துருந்தாலும், அதை எவ்வாறு புரிந்து கொள்வதென தற்காலத்தில் தெரியவில்லை.

மொழி

இன்கா பேரரசில் ஒரு எழுதப்பட்ட மொழி இல்லை என்பதால், குவெச்சுவா என்ற பேச்சு மொழியை தான் பயன்படுத்தினர். இது தவிர பல்வேறு பகுதிகளிலும் வட்டார மொழிகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த பேச்சுகளில் குவெச்சுவா போன்றே மொழியியல் அமைப்பு இருந்தாலும், அது பேசப்படும் பகுதிக்கு ஏற்றவாறு மாற்றம் அடைந்தது.[7]

சமயம்

Thumb
இன்கா புராணங்களின் படி உருவாக்கும் கடவுளான விரகோச்சா

இன்காக்கள் மறு ஜென்மத்தில் (மறுபிறப்பு) நம்பிக்கை உடையவர்களாக இருந்தனர்.[8] பெரும்பாலான மதங்கள் பச்சாமாமா மற்றும் விரகோச்சா ஆகிய கடவுள்களை சார்ந்து இருந்தது. போரில் வெற்றி கொண்டவர்களுக்கு தங்கள் பலதெய்வ வரிசையில் இடம் கொடுக்க அவர்கள் மதம் கட்டுப்பாடு விதித்தது. இறப்பு என்பது பல சிக்கல்கள் நிறைந்த அடுத்த உலகத்திற்கு ஒரு பாதை என்று நம்பினர். இன்கா மக்கள் மண்டையோட்டு புனரமைப்பதில் ஈடுபட்டனர்.[9] அவர்கள் தலையை கூம்பு வடிவத்திற்கு மாற்ற தங்கள் குழந்தைகளின் மென்மையான மண்டையில் சுற்றி இறுக்கமான துணி பட்டைகளை கட்டினர். இவ்வாறு பிரபுக்கள் மற்றும் சமூகத்தில் உயர்ந்தவர்களுக்கு மட்டுமே செய்யப்பட்டது.

இன்கா மக்கள் நர பலி இடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஏறத்தாழ 4,000 சேவகர்கள், நீதிமன்ற அதிகாரிகள், மற்றும் மறுமனையாட்டிகள் இன்கா பெரியவர் கபாகின் மரணத்தின் போது கொல்லப்பட்டனர்.[10]

Remove ads

பொருளாதாரம்

இன்கா பேரரசின் பொருளாதாரம் மிகவும் திட்டமிட்ட பொருளாதாரமாக கருதப்பட்டது. இன்கா பேரரசு மற்றும் வெளி பிரதேசங்களுக்கு இடையிலான வணிக தொடர்புகளுக்கான சான்றுகள் வெளிப்படுத்தப்பட்ட போதிலும், இன்கா பகுதி ஒரு கணிசமான உள்நாட்டு சந்தைப் பொருளாதாரம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.[11]

மேற்கோள்கள்

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads