இமாம் திர்மிதி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அபூ ஈஸா முகமது அல் திர்மிதி ("Abū ‘Īsá Muḥammad at-Tirmidhī " அரபி: أبو عيسى محمد الترمذي) பொதுவாக இமாம் திர்மிதி என அழைக்கப்படுகிறார்.இவர் பாரசீக இஸ்லாமிய அறிஞர் , குறிப்பாக ஒரு முஹதீத் ( ஹதீஸ் கலை அறிஞர் ) என்று அழைக்கப்படுகிறார்.[1]. ஆறு முக்கிய ஹதீஸ்கள் தொகுப்புகளான ஸிஹாஹ் ஸித்தாவில் இவர் தொகுத்த திர்மிதி ஹதீஸ் நூல் மிகவும் நம்பகமான ஹதீஸ் தொகுப்பாக கருதப் படுகிறது.[2].
Remove ads
பிறப்பு
இமாம் திர்மிதி, இ.நா 209 ( கி.பி. 824)ல் பாரசீக குடும்பத்தில்(இன்றைய உசுபெக்கிசுத்தான் நாட்டில்) உள்ள திர்மித் நகரில் பிறந்தார்.[3] திர்மித் என்ற நகரில் பிறந்தமையால் திர்மிதி என்று அழைக்கப்படுகிறார்.[4] இமாம் திர்மிதி அப்பாசிய கலிபா மஃமுன் அரசன் காலத்தில் பிறந்தார்.[5][6] ஈஸா என்பவர் இவர்களின் தகப்பனாராவார்.
கல்வி
இவர் பிறவியிலேயே பார்வை இழந்தவர்.ஒரு சில அறிஞர் சிறு வயதில் பார்வை இழந்தார் என்கின்றனர். [7] இருபது வயது பூர்த்தியான பின் இமாம் திர்மிதி அவர்கள் கல்வி கற்க ஆரம்பித்தார்கள். பார்வை இழந்து தாமதமாகக் கற்க ஆரம்பித்தார்கள்.
ஹதீஸ் தொகுப்பு
இமாம் திர்மிதி அவர்கள் ஹிஜ்ரி 250 இ.நா (கி.பி. 864) ல் ஹதீஸ் தொகுப்பு பணியை ஆரம்பித்து ஹிஜ்ரி 270 இ.நா (கி.பி. 884 ,ஜூன் 9) ல் தொகுத்து முடித்தார்கள்.[8] இமாம் திர்மிதி அவர்கள் பல்கு நகரில் பலகாலம் பல கலைகள் கற்றுத் தேர்ந்த பின்னர் பல அரேபிய தேசங்களில் பல காலம் பிரயாணஞ் செய்து பலரிடம் ஹதீஸ்களைக் கேட்டறிந்து ஹதீஸ் கலையில் தேர்ச்சியுற்றார்கள்.
ஆசிரியர்கள்
இமாம்களான புகாரி,முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ், அபூதாவூத், குதைபா பின் ஸஃது, முஹம்மது பின் பஷ்ஷார், அஹ்மத் பின் முஸ்னீ, ஸுப்யான் பின் வகீஃ. குதைபா, அலீ பின் ஹஜர், தாரமீ,அபூ சுர்ஆ போன்ற அறிஞர்களிடம் ஹதீஸ்கள் கேட்டறிந்தார்.[9] , [7]
இவரது நூல்கள்
ஜாமிஉத் திர்மிதி, இலல், ஷமாயில், அஸ்மாஉ ஸ்ஸஹாபா.[7] இதைத் தவிர அத்தாரீஹ், அஸ்ஸுஹ்த், அல்அஸ்மாஉ வல்குனா ஆகிய நூற்களைத் தொகுத்துள்ளார். ஆனால் இவை நம் கைக்குக் கிடைக்கவில்லை.[4]
இறப்பு
இமாம் திர்மிதி 70 ஆம் வயதில் தன்னுடைய பிறந்த நகரான திர்மித் நகரிலேயே 13 ம் தேதி ரஜப் மாதம் இ.நா 279 (8 அக்டோபர் கி.பி. 892) ல் இறந்தார்.[4] [10]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads