இம்பா மக்கள்

From Wikipedia, the free encyclopedia

இம்பா மக்கள்
Remove ads

இம்பா மக்கள் என்போர் 20,000 முதல் 50,000 எண்ணிக்கையிலான ஓர் ஆப்பிரிக்க இனக்குழு.[1] இவர்கள் வடக்கு நமீபியாப் பகுதியில் உள்ள குனென் பகுதியிலும் குனென் ஆற்றுக்கப்பால் அங்கோலாவிலும் வாழ்கின்றனர்.[1][2] கமன்சாபு என்னுமிடத்தில் அண்மையில் இவர்கள் இரு சிற்றூர்களை அமைத்துள்ளனர். இவை சுற்றுலா இடங்களாக அறியப்படுகிறன்றன. இவர்கள் நாடோடிகள் ஆவர். இவர்கள் ஒட்சிகிம்பா என்னும் மொழியைப் பேசுகின்றனர்.

Thumb
இம்பா இனப் பெண்

ஆடு, மாடுகள் வளர்ப்பது இவர்களது முதன்மையான தொழிலாகும்.[1][2] பால் கறத்தல் பெண்களின் பணி. மேலும் குழந்தைகளைப் பராமரிப்பதும் பெண்களின் பணியே. இம்பா மக்கள் மிகக் குறைவான ஆடைகளையே அணிகின்றனர். ஆண்களும் பெண்களும் மேற்சட்டை அணிவதில்லை. விலங்குகளின் தோலினால் ஆன சிறு பாவாடை போன்ற ஆடையையே அணிகின்றனர். இவர்களது வீடு சிறு வட்ட வடிவிலான குடிசை ஆகும்.

Thumb
இம்பா இடையர்கள்
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads