இயக்கம் கைப்பற்றல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இயக்கம் கைப்பற்றல் (Motion capture) எனப்படுவது குறித்த ஒரு நபர் அல்லது பொருளின் அசைவை பதிவு செய்து கணினியில் உருவாக்கப்பட்ட எண்ணிய மாதிரி (Digital model) ஒன்றிற்கு மாற்றீடு செய்தல் ஆகும்.[1][2][3]
இந்த தொழில் நுட்பமானது அசைவாக்க திரைப்படங்கள் (animation films) , கணினி விளையாட்டுக்களின் உருவாக்கம், இராணுவம், விளையாட்டு, மருத்துவம் , ரோபோ களின் உருவாக்கம் போன்ற பல துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இதன் போது சிறப்பான உபகரணங்கள் மூலம் ஒரு ஆள் அல்லது மிருகம் அல்லது பொருள் ஒன்றின் அசைவுகள் கைப்பற்றப்படுகின்றன. இந்த தரவுகள் கணினிக்கு அனுப்பப்படும். கணினியில் வடிவமைக்கப்பட்ட உருவானது வெளியே உள்ள ஆள் அல்லது மிருகம் அல்லது பொருளை ஒத்த அசைவினை மேற்கொள்ளும். முப்பரிமாண அசைவாக்க திரைப்படங்களில் கணினியில் வரையப்பட்ட உருவங்களின் இயக்கத்தினை இலகுவாக உள்ளீடு செய்வதற்கு இந்த பொறிமுறையானது பாவிக்கப்படுகின்றது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads