இயக்குநர் குழுமம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இயக்குநர் குழுமம் (board of directors) ஓர் நிறுவனம் அல்லது அமைப்பின் வரையறுக்கப்பட்டச் செயல்பாடுகளை குழுவாக இணைந்து மேற்பார்வையிடும் அங்கத்தினர்களைக் கொண்ட குழுமமாகும். "இயக்குநர்கள்" என அழைக்கப்படும் இதன் அங்கத்தினர்கள் நிறுவனத்தின் பங்குதாரர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டோ நேரடியாக நியமிக்கப்பட்டோ பொறுப்பேற்கிறார்கள். இந்த அதிகார அமைப்பு சில நேரங்களில் பொறுப்பாளர் குழுமம் (board of trustees) என்றோ மேலாளர் குழுமம் (board of managers) என்றோ ஆளுநர் குழுமம் (board of governors) என்றோ செயலாக்கக் குழுமம் (executive board) என்றோ அழைக்கப்படலாம். பொதுவழக்கில் இது "குழுமம்" என்றே குறிப்பிடப்படுவதுண்டு.

ஓர் குழுமத்தின் செயல்பாடுகள் அதற்களிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள், கடமைகள் மற்றும் பொறுப்புக்களுக்கேற்ப அமைந்திருக்கும். இவை பொதுவாக அந்த நிறுவனத்தின் அமைப்புச் சட்டங்களில் வரையறுக்கப்பட்டிருக்கும். இந்தச் சட்டங்களில் குழுமத்தின் மொத்த அங்கத்தினர் எண்ணிக்கை, அவர்களின் தேர்ந்தெடுப்பு முறைகள் மற்றும் எவ்வப்போது சந்திக்க வேண்டும் என்பனவும் குறிப்பிடப் பட்டிருக்கும்.

வாக்களிக்கும் உரிமையுள்ள அங்கத்தினர்கள் கொண்ட அமைப்புகளில், காட்டாக தொழில்சார் சங்கங்கள், இயக்குநர்கள் குழுமம், அவர்களை நியமிக்கும் பொறுப்புடைய முழுமையான பொது அவைக்குக் கீழ்படிதலும் கட்டுப்பட்டவர்களுமாவர். ஓர் பங்கு நிறுவனத்தில் குழுமம் பங்குதாரர்களால் தேர்ந்தெடுக்கப்படுவதுடன் அவர்களுக்கு பொறுப்பானது. பொதுவான வாக்குரிமை இல்லாத அங்கத்தினர்களைக் கொண்ட அமைப்புகளில், காட்டாக பல்கலைக்கழகம், குழுமமே மிக உயர்ந்த மேலாளும் மையமாகும்.[1]

ியக்குநர்கள் குழுமத்தின் பணிகளாக குறிப்பிடப்படுபவை:[2][3]

  • நிறுவனத்தின் மேல்மட்ட கொள்கைகளையும் நோக்கங்களையும் வரையறுத்து மேலாளுதல்;
  • முதன்மை செயல் அதிகாரியைத் தேர்ந்தெடுத்தல், நியமித்தல், அவரது பணியை மீளாய்வு செய்தல் மற்றும் அவருக்குத் துணை நிற்றல்;
  • போதுமான நிதியம் பெறுவதை உறுதி செய்தல்;
  • ஆண்டு வரவுசெலவு கணக்குகளுக்கு ஒப்புதல் நல்குதல்;
  • நிறுவனத்தின் செயலாக்கம் குறித்து பங்குதாரர்களிடம் பொறுப்பேற்றல்.
  • தங்களது ஊதியங்களையும் ஈடுகளையும் தீர்மானித்தல்

பொதுத்துறை நிறுவனங்களின் இயக்குநர்கள் குழுமம் சட்டப்பேரவை அல்லது நாடாளுமன்றத்திற்கு பொறுப்பானவை. அவர்களுக்கான சட்டப் பொறுப்புகளும் சிக்கல்களும் ஏனைய அமைப்புகளின் குழுமங்களை விடக் கூடுதலானது.

பொதுவாக இயக்குநர்கள் குழுமம் தங்களுக்குள் ஒருவரை "தலைவராக"த் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர்.

Remove ads

மேற்கோள்கள்

உசாத்துணைகள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads