இயற்பியலறிஞர்

இயற்பியலில் ஆராய்ச்சி செய்பவர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

இயற்பியலறிஞர் (Physicist)என்பவர் இயற்பியல் என்ற துறையில் நிபுணர் ஆவர். இயற்பியல் என்பது பொருளியல் அண்டத்தின் அனைத்து நீட்டல் அளவுறை கால அளவுறைகளிலும் பொருளுக்கும் ஆற்றலுக்கும் இடையே ஏற்படும் ஊடாட்டங்களையும் அடக்கிய அறிவியற்றுறை ஆகும்.[1][2] எனவே இயற்பியலறிஞர்கள் பொதுவாகவே நிகழ்பாடுகளின் அடிமூலமான இறுதிக் காரணத்தைக் கண்டறிவதில் ஈடுபாடுள்ளவர்கள்; மேலும் தங்கள் புரிதலைக் கணிதவழியாகக் கட்டமைப்பர்.

இயற்பியலறிஞர்கள் அனைத்து நீட்டல் அளவுறைகளையும் எட்டியபடியான அகன்ற ஆய்வுப்புலங்களில் ஆய்வுப்பணி புரிவர்: அணுவக இயற்பியல், அணுத்துகளியற்பியல் என்று தொடங்கி உயிரியலியற்பியல் என்றெல்லாந் தாண்டி அண்டம் முழுதையும் உள்ளடக்கிய அண்டவியல் அளவுறை வரைக்கும் என்று அந்த ஆய்வுப்புலங்களின் அகவை எட்டும். இயற்பியலறிஞர்கள் இருவகைப்படுவர்: பொருளியல் நிகழ்பாட்டுக் கவனிப்பிலும் சோதனைப் பகுப்பாய்விலும் ஈடுபடும் சோதனை இயற்பியலறிஞர்கள் என்றும் இயற்கை நிகழ்பாடுகளின் காரணங்காணல், விளக்கம், கணிப்பு ஆகிய நோக்கங்களோடு பொருளியல் அமையங்களுக்குக் கணித அந்தாயங்களை அமைப்பதில் ஈடுபடும் கோட்பாட்டியல் இயற்பியலறிஞர்கள் என்றும் இருவகையினர்.[1][3][4][5]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads