இயேசுவின் விண்ணேற்றம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இயேசுவின் விண்ணேற்றம் என்பது விவிலியத்தில் காணப்படும் கிறித்துவ நம்பிக்கைகளுள் ஒன்றாகும். இயேசு உயிர்த்தெழுந்து 40 நாட்களுக்கு பிறகு தனது உடலோடு, 11 திருத்தூதர்களின் முன்னிலையில் விண்ணேற்றம் அடைந்தார் என விவிலியம் கூறுகின்றது. இதன் முடிவில், வெண்ணுடை அணிந்த இருவர் தோன்றி, சீடர்களிடம் இயேசு எப்படி விண்ணேற்றமடைந்ததாரோ அவ்வாறே அவர் மீண்டும் வருவார் என்றனர்.

நற்செய்தி நூல்களில் இன்நிகழ்வு இருமுரையும், (லூக்கா 24:50-53 மற்றும் மாற்கு 16:19). திருத்தூதர் பணிகள் 1:9-11இலும் விவரிக்கப்பட்டுள்ளது.
நைசின் விசுவாச அறிக்கை மற்றும் திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கையில் இந்த நிகழ்வு ஒரு அடிப்படை கிறித்தவ நம்பிக்கையாக அறிக்கையிடப்பட்டது. இயேசுவின் விண்ணேற்றம், இயேசு தனது உடலோடு விண்ணகம் சென்றார் என எடுத்தியம்புவதால், அவர் தனது இறை இயல்போடு சேர்த்து மனித இயல்போடும் விண்ணகம் சென்றார் என்பதனை உறுதிபடுத்துகின்றது.[1]
பல திருச்சபைகளில் இந்த நிகழ்வு, உயிர்ப்பு ஞாயிறுக்குப்பின் வரும் 40ஆம் நாளில் விழாவாகக் கொண்டாடப்படுகின்றது. கத்தோலிக்க திருச்சபையில் இது ஒரு கடன் திருநாளாகும். இந்தியா உட்பட சில நாடுகளில், இவ்விழா அடுத்த ஞாயிறுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.[1] இவ்விழா நான்காம் நூற்றாண்டு முதலே கொண்டாடப்பட்டு வருவதற்கு சான்றுகள் உள்ளன.[1]
இந்த நிகழ்வு, இயேசுவின் திருமுழுக்கு, தோற்றம் மாறுதல், சிலுவைச் சாவு மற்றும் உயிர்த்தெழுதலேடு சேர்த்து ஐந்து மிக முக்கிய நகழ்வுகளுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது.[2][3]
இந்த நிகழ்வு நடந்ததாக நம்பப்படும் இடத்தில் இப்போது விண்ணேற்றச் சிற்றாலயம் உள்ளது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads