இரட்டை மீனவர் முடிச்சு

From Wikipedia, the free encyclopedia

இரட்டை மீனவர் முடிச்சு
Remove ads

இரட்டை மீனவர் முடிச்சு அல்லது இரட்டை ஆங்கிலேயர் முடிச்சு என்பது உண்மையில் இரண்டு கயிறுகளைத் இணைப்பதற்குப் பயன்படும் ஒரு தொடுப்பு ஆகும். இந்த முடிச்சும், மும் மீனவர் முடிச்சும் பாறை ஏறுவதில் அதிகமாகப் பயன்படும் முடிச்சுக்களாகும். இவை தவிர, மீட்பு வேலைகளிலும், தேடுதல் நடவடிக்கைகளிலும் இம் முடிச்சைப் பயன்படுத்துகின்றனர். பாறை ஏறுபவர்களின் பாதுகாப்புத் தொகுதியின் பல்வேறு பகுதிகளை இணைப்பதற்கான உயர் வலிமை கொண்ட நாண்களை உருவாக்குவதே பாறையேற்றத்தில் இந்த முடிச்சின் முதன்மைப் பயனாகும்.

Thumb
இரட்டை மீனவர் முடிச்சை முடிதல்
விரைவான உண்மைகள் இரட்டை மீனவர் முடிச்சு, பெயர்கள் ...

இம் முடிச்சின் இன்னொரு பயன்பாடு முக்கியமான வேறு முடிச்சுக்களுக்குப் பின்பலமாக இருப்பதாகும். கழுத்தணிகளைக் கட்டுவதற்கும் இந்த முடிச்சைப் பயன்படுத்துவது உண்டு. இதில் இரண்டு கயிறுகளுக்குப் பதில் ஒரே கயிற்றின் இரண்டு முனைகளை முடிகின்றனர். இந்த முடிச்சைப் பயன்படுத்துவது மூலம் கயிற்றை அறுக்காமல் கழுத்தணியின் அளவைச் சுருக்கவோ விரிவாக்கவோ முடிகிறது.

Remove ads

குறிப்புகள்

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads