இரண்டாம் இரகுநாத தொண்டைமான்

புதுக்கோட்டை அரசர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

இராஜா இரகுநாத தொண்டைமான் பகதூர் (Raja Sri Raghunatha Tondaiman Bahadur (c. 1798 - 13 சூலை 1839) என்பவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் அரசராக 1825 சூன் 4 முதல் 1839 சூலை 13வரை இருந்தவர்.

விரைவான உண்மைகள் இரண்டாம் இரகுநாத தொண்டைமான், ஆட்சிக்காலம் ...
Remove ads

முன்வாழ்கை

புதுக்கோட்டை அரசர் விஜயரகுநாத தொண்டைமானுக்கும் அவரது இரண்டாவது மனைவியான ஆயி அம்மாள் ஆய் சாகிப் ஆகியோருக்கு மகனாக 1798இல் இரகுநாத தொண்டைமான் புதுக்கோட்டையில் பிறந்தார். இவர் தனி ஆசிரியரிடம் கல்வி பயின்றார்.[1] விஜயரகுநாத தொண்டைமானினுக்கு எஞ்சி இருந்த மகன்களில் இவர் இரண்டாவது மகனாவார். 1825 சூனில் இவரது அண்ணன் இரண்டாம் விஜய ரகுநாதராய தொண்டைமான் இறந்ததையடுத்து இவர் அரியணை ஏறினார்.

ஆட்சி

1825 சூலை 20இல் அரியணை ஏறிய இரகுநாத தொண்டமான் 14 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவரது ஆட்சிக் காலத்தில் குறிப்பிடத்தக்கப் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. காவிரி ஆற்று நீரை புதுக்கோட்டை சமஸ்தானத்துக்குக் கொண்டு வருவதற்கான ஒரு திட்டத்தை இரகுநாத தொண்டமான் 1837 ஆம் ஆண்டு பரிந்துரைத்தார், ஆனால் நிதி வசதி இல்லாததால் அதை நிறைவேற்ற முடியவில்லை.[2] இவருக்கு ஆங்கில அரசாங்கத்தால் 1830 ஏப்ரல் இரண்டாம் நாள் ஹிஸ் எக்சலென்சி என்ற பட்டமும், 17 குண்டு மரியாதையும் அளிக்கப்பட்டது.

Remove ads

குடும்பம்

இரகுநாத தொண்டைமான் இரண்டு திருமணங்களை செய்து கொண்டார். முதல் திருமணம் 1812 ஆண்டு கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சூரியமூர்த்தி பன்றிகொண்டானின் மகளாவார். அடுத்து இராணி கமலம்பாய் ஆய் சாகிப் என்பவரை மணந்தார். இந்த இணையருக்கு இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் பிறந்தனர்.

  • இராஜகுமாரி பெரிய இராஜம்மணி பாயி சாகிப் (இறப்பு 1836)
  • இராஜகுமாரி சின்ன இராஜம்மணி பாயி சாகிப் (இறப்பு 1840)
  • இராமச்சந்திர தொண்டைமான் (1829-1886)
  • திருமலை தொண்டைமான் (1831-1871)

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads