இரண்டாம் போனிஃபாஸ் (திருத்தந்தை)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரண்டாம் போனிஃபாஸ் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 530 முதல் 532 வரை இருந்தவர்.
இவரே முதல் ஜெர்மானிய திருத்தந்தையாவார். இவர் பிறப்பால் ஆஸ்திரோகோத் (Ostrogoths) ஆவார். கோதிக் அரசன் அதாலரிகின் தூண்டுதலால் இவருக்கு முன் திருத்தந்தையாக இருந்தவர் இவரை தேர்ந்தெடுத்தார். இவரின் ஆட்சியில் சிலகாலம் உரோமை நகர குருக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தியோஸ்குருஸ் என்ற எதிர்-திருத்தந்தை இருந்தார். போனிஃபாஸும், தியோஸ்குருஸும் 22 செப்டம்பர் 530 அன்று, திருப்பொழிவு செய்யப்பட்டனர். ஆனால், 20 நாட்களில் தியோஸ்குருஸ் இறந்தார்.
Remove ads
உரோமன் நாட்காட்டி
போனிஃபாஸ், யூலியின் நாட்காட்டியில் இருந்த ஆண்டுகளின் எண்ணிக்கையை அப் ஊர்பி கொண்டிட்டாவிலிருந்து அனோ டொமினிக்கு மாற்றினார்.
மேற்கோள்கள்
"Pope Boniface II". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.- At GM Arts
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

