இரண்டாம் விமலதர்மசூரியன்
கண்டி இராச்சியத்தின் அரசன் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரண்டாம் விமலதர்மசூரியன் (Vimaladharmasurya II, ஆட்சியில்: 1687–1707) கண்டி இராச்சியத்தின் அரசனாக இருந்தவர். இவரது தந்தை இரண்டாம் இராஜசிங்கனுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்தவர். யோசப் வாசு அடிகளை கண்டி இராச்சியத்தில் தங்கியிருக்கவும், கிறித்தவ வழிபாடுகளை நடத்தவும் அனுமதி அளித்தவர்.
சிறு வயது முதலே ஒரு பௌத்தத் துறவியாக நீண்ட காலம் வளர்க்கப்பட்டமையால் இவர் இயற்கையாகவே அமைதியைப் பேணுபவராக இருந்தார். பர்மாவில் இருந்து 33 பௌத்த துறவிகளை வரவழைத்து பௌத்த உயர் பீடம் ஒன்றை அமைத்தார்.
இவரத் பதவிக்காலத்தில் இலங்கையின் டச்சு ஆட்சியாளர் கண்டி அரசிக் கைப்பற்ற பல வழிகளிலும் முனைந்து தோற்றனர். ஆனாலும், கண்டி இராச்சியத்தின் வெளிநாட்டு வணிகத்தை டச்சு வணிகர்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
1703 இல் கோரமண்டல் முகலாயத் தளபதி தாவுத் கான் பன்னி இலங்கையில் இருந்து 30 முதல் 50 யானைகள் வரை வாங்குவதற்கு 10,500 காசுகள் வரை செலவழித்தார்.[1] இந்தக் கொள்முதல்களை இரண்டாம் விமலதர்மசூரியன் அங்கீகரித்திருந்தார்.
Remove ads
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads