இரவீந்திரநாத் குமார்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

ப.ரவீந்திரநாத் (பிறப்பு:03 பிப்ரவரி 1980) ஓர் இந்திய அரசியல்வாதியும், 17ஆவது நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகனாவார். இவர் ஓ.பி.ஆர் என்றும் அறியப்படுகிறார்.

விரைவான உண்மைகள் ப.ரவீந்திரநாத், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ...
Remove ads

அரசியல் வாழ்க்கை

இவர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், தேனி தொகுதியிலிருந்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழ்நாடு காங்கிரசு மூத்த தலைவரான ஈ. வெ. கி. ச. இளங்கோவனை விட 76,319 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். தேனி மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவையின் மாவட்ட செயலாளராக இருந்தார். பின்னர் கட்சி இபிஎஸ் வசம் சென்ற பிறகு நீக்கப்பட்டார். மற்றும் மக்களவை அதிமுக தலைவராக அங்கீகரிக்கப்பட்ட நபராக கருதக்கூடாது அதிமுக தலைமை சபாநாயகருக்கு கடிதம் எழுதியது. ஆனாலும் இன்று வரை நடவடிக்கை இல்லை. இவர் நீதிமன்ற தீர்ப்பால் தகுதி இழப்பு செய்யப்பட்டார். மேல் முறையீட்டில் உள்ளது.[1][2] 2019 மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக சார்பில் வெற்றிபெற்ற ஒரே நபர் இவர்தான்.

Remove ads

வழக்கு

ப. ரவீந்திரநாத் குமார் தமது மக்களவை தேர்தல் வேட்பு மனுவில் கூறிய சொத்துகளுக்கு மேல் சொத்துக்கள் வைத்திருப்பதால், அவரது மக்களவை உறுப்பினர் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் சென்னை உயர் நிதிமன்றம் 6 சூலை 2023 அன்று அளித்த தீர்ப்பில், ப. இரவீந்திரநாத் குற்றம் இழைத்துள்ளார் என்றும், எனவே அவரது மக்களவைத் தேர்தலில் மக்களவை உறுப்பினராக வெற்றி செல்லாது என அறிவித்தது.[3]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads