இராசரத்தினம் விளையாட்டரங்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராசரத்தினம் விளையாட்டரங்கம் (Rajarathinam Stadium) என்பது இந்தியா, தமிழ்நாடு, சென்னை, எழும்பூரில் உள்ள மார்ஷல்ஸ் சாலையில் அமைந்துள்ள ஒரு மைதானமாகும். இது மாநில காவல் துறைக்குச் சொந்தமானது. இந்த மைதானம் முக்கியமாக காவல்துறையினரின் அணிவகுப்பு மைதானமாகப் பயன்படுத்தப்பட்டது.
Remove ads
முன் சீரமைப்பு
காவல்துறை அணிவகுப்பு மைதானமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த மைதானம் தற்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது. உள்ளூர் வாசிகளுக்குக் காலை நடைப்பயிற்சிக்கான இடமாகவும் இது விளங்குகிறது. புதுப்பிக்கப்படுவதற்கு முன், இது மூத்த காவல்துறை அதிகாரிகளுக்கு, குறிப்பாக காவல்துறை இயக்குநர்கள் அணிவகுப்பு மற்றும் நகரப் பள்ளிகளின் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஆண்டு நாள் கொண்டாட்டங்களுக்கான இடமாகவும் பயன்படுத்தப்பட்டது.
Remove ads
புதுப்பித்தல்
2009ஆம் ஆண்டு மைதானத்தின் மீள் நிர்மாணப் பணியானது, முகாமை கட்டுவதற்கும் ஒரு பயிற்சி நிலையத்திற்கும் ₹ 31.655 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ்நாடு காவல்துறை வீட்டுவசதி கழகம் வசம் கட்டுமானப் பணிகள் ஒப்படைக்கப்பட்டது. புதிய வசதிகள் ஒன்பது பாதைகளுடன் கூடிய 400-மீட்டர் நீளமான ஓடுபாதையை உள்ளடக்கியது. அலுவலகங்கள், நூலகம், வகுப்பறைகள் மற்றும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தங்குமிடங்களை உள்ளடக்கிய செயற்கை இழையால் மூடப்பட்ட பார்வையாளர் மாடம், முக்கியப் பிரதிநிதிகள் பகுதி, குளிரூட்டப்பட்ட காட்சிக்கூடம் மற்றும் வர்ணனையாளர்களுக்கான அறைகள், நான்கு பொது கழிப்பறைகள், மற்றும் இரண்டு தொகுதிகள் இணைக்கப்பட்ட கழிப்பறை என பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இரண்டு கூடுதல் பார்வையாளர்கள் அமரக்கூடிய மாடங்கள் ஒவ்வொன்றும் 4,521 சதுர அடி பரப்பில் கட்டப்பட்டுள்ளன.[1]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads