இராச்சாண்டார் திருமலை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராச்சாண்டார் திருமலை கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியத்தில் உள்ளது. இங்கு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் உயர்நிலைப்பள்ளி, மற்றும் ஆரம்பப் பள்ளி ஒன்றும் உள்ளது. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 99 வேப்பமரங்கள் நடப்பட்டு உள்ளன. இவை கும்பகோணம் குழந்தைகள் பலியானதை குறிக்கும்வகையில் நடப்பட்டு உள்ளன. 800-இற்கும் அதிகமான குழந்தைகள் இப்பள்ளியில் படிக்கின்றனர். 11 ஏக்கரில் அமைந்தது இப்பள்ளி.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
![]() | இக்கட்டுரையைத் தரமுயர்த்த வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, ஆங்கில விக்கிப்பீடியா தகவலையும் பயன்படுத்தி, இந்தக் கட்டுரையைத் துப்புரவு செய்து உதவலாம். |
Remove ads
கோவில்
இங்கு ஒரு சிறிய மலைக் கோயில் அமைந்துள்ளது. சிவன், பார்வதி மூலதெய்வம். பிள்ளயார், மூருகன், நவக்கிரகங்கள் தனித்தனி சன்னிதிகளில் உள்ளன. திருமலையை ஒத்து உள்ளதால் இராச்சாண்டார் திருமலை எனும் பெயர் பெற்றுள்ளது. 1000 வருடம் பழமையான கோயில் இது. ஒரு சுனையும் உண்டு. தல மரம் வில்வம். 6 கால பூசை நடக்கின்றது. குன்றின் மீது அமைந்த சிவன் கோவில் சில. அதில் இதுவும் ஒன்று.
ஊரைப்பற்றி
இவ்வூர் சிறிய கிராமம். மக்கள் தொகை 3500 மட்டுமே. வாலியம் பட்டி எனும் சிறிய ஊர் இங்கு உள்ளது. தொட்டிய நாயக்கர் மட்டுமே வாழம் ஊர். மிக கட்டுப்பெட்டியான சமூகம் இது. மாடுகளை அதிகம் வளர்த்து வருகின்றனர். 200-300 மாடுகள் ஓரே வீட்டில் வளர்கின்றன. வேட்டையாடுதல் இவர்களது குலத்தொழில். வெள்ளி கிழமை வேட்டை இவர்களது பழக்கம். முயல், எலி, பூனை போன்றவை வேட்டையாடப்படுகின்றன. பெண்களூக்கு பல கட்டுப்பாடுகள் உண்டு.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads