இராஜகாரிய முறை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இராஜகாரியம் (Rājākariya) அல்லது இராஜகாரிய முறை (மன்னரின் வேலை) என்பது இலங்கையில் உள்ள பண்டைய அரசுகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட நில உரிமையின் ஒரு வடிவமாகும். இராச்சியத்தில் உள்ள அனைத்து நிலங்களையும் வைத்திருக்கும் அரசருக்கு சேவைகளுக்கு ஈடாக நிலம் வழங்க இந்த நடைமுறை அனுமதிக்கிறது. இந்தச் சேவைகள் சாலைகள், கட்டிடங்கள் அல்லது நீர்ப்பாசனம் போன்ற பொதுப் பணிகளுக்கும், சாதி தொடர்பான தொழில்கள் சார்ந்த சிறப்புச் சேவைகளுக்கும் தொழிலாளர்களாக இருக்கலாம். கோல்புறூக்-கேமரன் ஆணைக்குழுவின் பரிந்துரைகளைப் பின்பற்றி நிர்வாக, பொருளாதார சீர்திருத்தங்களின் கீழ் 1832 இல் ஒழிக்கப்படும் வரை இதன் கடைசி வடிவம் பிரித்தானிய நிர்வாகத்தின் கீழ் இருந்த கண்டி இராச்சியத்தில் நடைமுறையில் இருந்தது.[1]

Remove ads

பண்புகள்

இலங்கையில் நிலவிய இராஜகாரிய முறை ஐரோப்பாவில் நிலவிய நிலமானிய முறையை ஒத்தது. இதன் பண்புகளாவன:

  • நிலத்தை அடிப்படையாகக் கொண்டமை
  • விவசாயமே பிரதான தொழிலாக விளங்கியமை.
  • பண்டமாற்று முறையில் பொருட்கள் பரிமாறப்பட்டமை.
  • தொழிலை அடிப்படையாகக் கொண்ட சாதி அமைப்பு நிலவியமை

இலங்கையில் இராஜகாரிய முறை

இலங்கையில் இது பின்வரும் இரண்டு முறைகளில் காணப்பட்டன:

கட்டாய சேவை இராஜகாரிய முறை

  • நிலமனைத்தும் அரசனுக்கே சொந்தமானது. அதை அனுபவிப்பதற்காக மக்கள் இலவசமாக அரச பணிகளில் ஈடுபட வேண்டும்.

நிலத்தை அனுபவிப்பதற்கான இராஜகாரிய முறை

  • நிலத்தைப் பயன்படுத்தும் மக்கள் உற்பத்தியின் ஒரு பகுதியை வரியாக அரசனுக்கு வழங்க வேண்டும்.

இராஜகாரிய முறை

ஐரோப்பாவில் இயற்கையான முறையில் இது அழிவுற்றது. இலங்கையில் சட்டத்தின் மூலமே ஆங்கிலேயர் இதனை ஒழித்தனர்.

ஆளுநர் பிரடெரிக் நோத்தின் பங்களிப்பு

பிரித்தானிய ஆளுநர் பிரடெரிக் நோத் முதன் முறையாக இதனை ஒழித்தார். இது பிற்போக்கான ஒரு முறையாக இருந்தமையாலும் உழைப்புச் சுரண்டல் இடம்பெறுவதனாலும் பணப் பொருளாதாரத்திற்குத் தடையாக இருப்பதனாலும் இராஜகாரிய முறையை ஒழிப்பதாகக் குறிப்பிட்டார்.

தோமசு மெயிற்லண்ட் மீண்டும் ஏற்படுத்தியமை

ஆளுநர் சேர் தோமசு மெயிற்லண்ட் மீண்டும் இம்முறையை ஏற்படுத்தினார். மக்கள் சம்பளத்திற்கு வேலைசெய்ய முன்வராமையால் அரசப் பணிகளை முன்னெடுப்பது சிரமமாக இருக்கவே இந்நடவடிக்கையை மேற்கொண்டார்.

கோல்புறூக் பிரபு முற்றாக ஒழித்தமை

வில்லியம் கோல்புறூக் பிரபு 1833 இல் முற்றாக இதனை ஒழித்தார். அதற்கான காரணங்களாவன:

  • மக்களை நில அடிமைத்துவத்திலிருந்து விடுவிப்பதற்காக
  • பெருந்தோட்டத்துறைக்குத் தேவையான நிலங்களைப் பெற்றுக் கொள்வதற்காக
  • சுதந்திரமான முறையில் தொழிலாளர்களைப் பெற்றுக் கொள்வதற்காக
Remove ads

இராஜகாரிய முறை ஒழிக்கப்பட்டதன் முக்கியத்துவம்

  • தனிமனித சுதந்திரத்திற்கு வழிவகுத்தமை.
    • இதனால் இது மனித உரிமையின் ஆரம்பமாகக் கருதப்படுகின்றது.
  • பணப் பொருளாதாரத்தை உருவாக்கியமை.
  • பெருந்தோட்டங்களை அமைப்பதற்கு வழிவகுத்தமை.
    • இதனால் இலங்கையில் ஏற்றிறக்குமதிப் பொருளாதாரம் உருவானமை.

மேற்கோள்களும் உசாத்துணைகளும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads