இராஜபதி கைலாசநாதர் கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராஜபதி கைலாசநாதர் கோயில் என்பது தூத்துக்குடி மாவட்டம் இராஜபதி ஊரில் அமைந்துள்ள சிவாலயமாகும்.[1] இச்சிவாலயம் நவகைலாயங்களில் ஒன்றாகவும், கேது தலமாகவும் போற்றப்படுகிறது.
Remove ads
சன்னிதிகள்
இச்சிவாலயத்தின் மூலவர் கைலாசநாதர். அம்பாள் சௌந்திர நாயகி.
விநாயகர், அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர், நடராஜர், சிவகாமி, தட்சிணாமூர்த்தி, வள்ளி தெய்வானை உடனுறை முருகன் ஆகிய சன்னதிகள் உள்ளன.
தலவரலாறு
அகத்திய முனிவரின் சீடர்களில் முக்கியமானவரான உரோமச முனிவர் தன் குருவான அகத்தியரின் உதவியுடன் சிவபெருமானை நேரில் தரிசித்து, அதன் மூலம் முக்தி அடைய வேண்டும் என்று விரும்பி தனது குருவிடம் அதற்கான வழிமுறைகளைக் கேட்டதாகவும். அதற்கு அகத்திய முனிவரும் தாமிரபரணி ஆற்றில் 9 தாமரை மலர்களை மிதக்க விட்டு அவை ஒவ்வொன்றாக கரை ஒதுங்கும் இடங்களில் சங்கு மூலம் நீராடி நவக்கிரகங்களின் வரிசையில் சிவபெருமானை வழிபட்டால் சிவபெருமானின் காட்சி கிடைக்கும் என்றும் அதன் மூலம் முக்தி அடையலாம் என்று சொல்லி 9 தாமரை மலர்களை தாமிரபரணி ஆற்றில் மிதக்க விட்டதாகவும் அந்த மலர்களை தொடர்ந்து சென்ற உரோமச முனிவரும் தனது குரு கூறியபடி வழிபட்டு முக்தி அடைந்தார் என்றும் அப்படி அம்மலர்கள் கரை ஒதுங்கிய இடங்கள் தான் இப்போது நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுவதாகவும் இத்தலங்களின் வரலாறு கூறுகின்றது.
Remove ads
திருவிழாக்கள்
திருவாதிரை சிவராத்திரி பிரதோசம் மாதபிறப்பு
ஆதாரங்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads