இராஜாதித்தர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராஜாதித்தியர் (Rajaditya Chola 10ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி) என்பவர் முதலாம் பராந்தகச் சோழரின் (ஆட்சிக் காலம் 907–955) மற்றும் சேர இளவரசி கோ கிழான் அடிகள் ஆகியோரின் மகனாவார்.[1] இவர் தக்கோலப் போருக்கு (948–949) தலைமை தாங்கியதற்காக அறியப்படுகிறார்.[2]

போரில் இறந்த இளவரசர் ராஜாதித்யனின் மரணம் குறித்து வழக்கத்திற்கு மாறாக சோழர்களால் நினைவுகூரப்பட்டது. இந்த நிகழ்வு குறித்த பதிவானது முதலாம் இராசராசனின் பெரிய லேடன் செப்பேடு[3] (கி.பி. 1006) மற்றும் இராசேந்திர சோழனின் திருவாலங்காடு செப்பேடு (கி.பி. 1018) ஆகியவற்றில் காணப்படுகிறது.[4][2] சோழர் செப்பேடுகளில் உள்ள சில விவரங்களில் வேறுபட்ட தகவல்கள், மேலைக் கங்கர் மரபைச் சேர்ந்த மூன்றாம் கிருஷ்ணன் மற்றும் இளவரசர் இரண்டாம் பூதுகன் (மூன்றாம் கிருஷ்ணனின் இளம் கீழ்த்தலைவர்) ஆகியோரின் அடக்கூர் கல்வெட்டில் காணப்படுகிறது.[5][2] சோழப் படையில் கேரளத் தளபதியான வெள்ளங்குமரனின் கல்வெட்டுகளிலும் போரைப் பற்றிய மறைமுகக் குறிப்புகளைக் காணலாம்.[6]
Remove ads
ஆரம்ப கால வாழ்க்கை
இராஜாதித்தியன், சேர பெருமாள் இளவரசி கோ கிழான் அடிகள் மற்றும் முதலாம் பராந்தக சோழன் (கி.பி. 907-955) ஆகியோரின் மகன் ஆவார்.[7] முதலாம் பராந்தகன், கோ கிழான் அடிகள் மற்றும் கிழான் அடிகள் ரவி நீலி (அவரது இரண்டு மகன்களான இராஜாதித்யன் மற்றும் அரிஞ்சய சோழரின் தாய்கள்) ஆகிய இரு சேர இளவரசிகளை மணந்ததாக அறியப்படுகிறது.[8][2] ஒரு சேர இளவரசிக்கும் பராந்தகருக்கும் நடந்த திருமணம், கி.பி. 910, கங்க மன்னர் இரண்டாம் பிருதிவிபதி அத்திமல்லானின் உதயேந்திரம் செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.[9][10]
இராஷ்டிரகூடர் மற்றும் அவர்களது கூட்டாளிகளுடனுடனான பெரும்போரை திருமுனைப்பட்டி நாட்டில் முதலாம் பராந்தக சோழன் எதிர்நோக்கி இருந்ததாகத் தெரிகிறது. 930களில், அல்லது கிபி 923 ஆம் ஆண்டிலேயே,[11] இளவரசர் இராஜாதித்தன் யானைகள் மற்றும் குதிரைகள் உட்பட கணிசமான படைகளுடன், தன் முழு குடும்பத்துடன், திருமுனைப்பட்டி நாட்டிலுள்ள இராஜாதித்தியபுரத்திற்கு (திருநாவலூர்/திருமாநல்லூர்) புதிய சோழ அரசின் வடக்கு எல்லைகளைப் பாதுகாத்தக்க அனுப்பபட்டார்[12]).[2] 930களின்[13] நடுப்பகுதியில் அவரது தாயார் (சேர இளவரசி கோ கிழான் அடிகள்) மற்றும் அவரது ஒன்றுவிட்ட சகோதரர் அரிஞ்சய சோழன் ஆகியோர் இராஜாதித்தியபுரம் சென்று சேர்ந்தனர்.[2] திருமுனைப்பட்டி நாட்டுக்குச் சென்ற கேரள (சேர) தலைவர்களின் பல இராணுவ வீரர்கள் இராஜாதித்யனுக்கு ஆதரவாக நின்றனர்.[2]
Remove ads
வீராணம் ஏரி
வீராணம் ஏரி, இராஜாதித்ய சோழன் காலத்தில் கி.பி. 907 முதல் 953 வரை சோழர்கள் ஏற்படுத்திய ஏரியாகும்.
தக்கோலப் போர்
தக்கோலப் போர், தக்கோலம் என்பது தற்போதைய வட தம்ழ்நாட்டின், வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் அருகே உள்ள ஊராகும்.[2]
தக்கோலப் போரில் இராட்டிரகூடர் மற்றும் அவர்களுக்கு அடங்கிய சிற்றரசர்கள் (மேலைக் கங்கர், பணர், வைதும்பர் உட்பட)[2] மற்றும் படைகள் ஒரு பக்கமும். சோழ இளவரசர் இராஜாதித்யரும், சோழ வீரர்களும் ,அவர்களுத்து துணையாக, கேரள (சேரர்) தலைவர்களின் படைவீரர்களும் மறுபக்கம் இருந்தனர்.[2]
தக்கோலப் போரில் போர்க்களத்தில் சோழ இளவரசர் இராஜாதித்தர் கொல்லப்பட்டார். இது சோழர் படையின் தோல்விக்கு காரணமாயிற்று.[2] அடக்கூர் கல்வெட்டின் படி, போரின் போது யானை மீது அமர்ந்து போரிட்டுக் கொண்டிருந்த இராஜாதித்தியரை, இரண்டாம் பூதுகன் அம்பை எய்தித் தாக்கபட்டார்[5] சோழ இளவரசர் அங்கேயே இறந்தார். சோழர்களின் படை பின்னர் தோற்கடிக்கப்பட்டு, குழப்பத்தில் பின்வாங்கியது.[2] இப்போரின் முடிவில் சோழப் பேரரசு வீழ்ச்சி கண்டது.[12]
நினைவு கூர்தல்
ராஜாதித்தரின் சிறப்பை போற்றும் வகையில் மத்திய அரசு 2025ல், தக்கோலத்தில் அமைந்துள்ள C I S F மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மைய வளாகத்தில் செயல்பட்டு வரும் மண்டல பயிற்சி மையத்துக்கு (RTC) " ராஜா ஆதித்ய சோழன் பயிற்சி மையம்" எனும் பெயரை வைத்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.[14][15]
மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) தனது 56வது நிறுவன தினத்தை 07 மார்ச் 2025 அன்று தமிழ்நாட்டின் தக்கோலத்தில் கொண்டாடியது , அங்கு உள்துறை அமைச்சர் அமித்சா, பயிற்சி மைய வளாகத்திற்கு "ராஜா ஆதித்ய சோழன் பயிற்சி மையம்" எனும் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.[16][17][18]
Remove ads
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
மேலும் படிக்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads