இராபர்ட் ஹார்டிங் விட்டேகர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இராபர்ட் ஹார்டிங் விட்டேகர் (Robet Harding Whittaker) அமெரிக்காவைச் சேர்ந்த தாவர சூழ்நிலையியல் அறிஞர். இவர் அமெரிக்காவின் கான்சாஸ் பகுதியில் விசிட்டா என்ற இடத்தில் 1920 ஆம் ஆண்டு திசம்பர் 27 ஆம் நாள் பிறந்தார்.

விரைவான உண்மைகள் இராபர்ட் ஹார்டிங் விட்டேகர், பிறப்பு ...
Remove ads

கல்வி

இவர் தனது இளங்கலைப் பட்டத்தினை கன்சாஸில் டோபிக்கா என்னும் இடத்தில் வாஸ்பர்ன் முனிசிபல் கல்லூரியில் (தற்போது வாஸ்பர்ன் பல்கலைக்கழகம்) பயின்றார். அதன் பின்னர் இலினாஸ் பல்கலைக்கழகத்தில் இராணுவத்துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

பணி

இவர் வாசிங்டன் மாநிலக் கல்லூரியில் தனது கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியினை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து புரோங்களின் கல்லூரி, கலிபோர்னியா பல்கலைக்கழகம், கார்னல் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பணிபுரிந்தார்.

சாதனை

இவர் 1969 ஆம் ஆண்டு உலகில் வாழும் உயிரினங்களை மொனிரா, புரோட்டிஸ்டா, பூஞ்சை, தாவர உலகம், விலங்கு உலகம் என ஐந்து வகையாக வகைப்படுத்தினார். எனவே இவர் வகைப்பாட்டியலின் தந்தை எனப் பெயர் பெற்றார்.[1][2]

இறப்பு

1980 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் நாளில் தனது 59 ஆவது வயதில் நியூயார்க் அருகில் உள்ள இச்சாக என்னும் இடத்தில் காலமானார்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads