இராமகிருஷ்ணம்பதி
கிருஷ்ணகிரி மாவட்ட சிற்றூர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராமகிருஷ்ணம்பதி (Ramakrishnampathy) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது ராமகிருஷ்ணம்பதி ஊராட்சிக்கு உட்பட்டது.
Remove ads
வரலாறு
இராமகிருஷ்ணம்பதி பகுதியில் இரண்டு நடுகற்கள் உள்ளன. நடுகல்லில் ஒரு வீரனின் புடைப்புச் சிற்பம் உள்ளது. நடுகல்லில் உள்ள கல்வெட்டில் கட்டிணைபருமரது பத்தாவது ஆட்சி ஆண்டில் பெரும்பாணதி அரையன் என்பவன் கங்க நாட்டை ஆண்ட காலத்தில் அதிவகூர் என்ற இடத்தில் இவ்வீரன் தொறு கொண்டபோது மாண்டான் என்று தெரிகிறது. அதிவகூர் என்பதே இராமகிருஷ்ணம்பதியின் பழைய பெயராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.[2]
அமைவிடம்
இந்த ஊரானது மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும், ஊத்தங்கரையில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைப்பாடு
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 505, மொத்த மக்கள் தொகை 1,967, இதில் 1,026 ஆண்களும், 941 பெண்களும் அடங்குவர்.[3]
மேற்கோள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads