இராமசந்திர பந்த் அமத்யா

From Wikipedia, the free encyclopedia

இராமசந்திர பந்த் அமத்யா
Remove ads

இராமசந்திர நீலகண்ட பவடேகர் (1650–1716), இராமசந்திர பந்த் அமத்யா (Ramchandra Pant Amatya) என்றும் அழைக்கப்பட்ட இவர்1674 முதல் 1680 வரை பேரரசர் சிவாஜியின் அஷ்டபிரதான் என்றைழைக்கப்பட்ட அமைச்சரவையில் நிதியமைச்சராக நிதியமைச்சராக பணியாற்றினார்.[1] பின்னர் இவர் சம்பாஜி, இராஜாராம், இரண்டாம் சிவாஜி மற்றும் இரண்டாம் சம்பாஜி ஆகிய நான்கு பேரரசர்களுக்கு அரசப் பிரதிநிதியாகப் பணியாற்றினார். குடிமை மற்றும் இராணுவ நிர்வாகத்தின் புகழ்பெற்ற குறியீடான அத்னியபத்ரா என்ற நூலை இவர் எழுதியுள்ளார். மேலும் மராட்டியப் பேரரசின் மிகச் சிறந்த நிர்வாகிகள், இராஜதந்திரிகள் மற்றும் இராணுவ மூலோபாயவாதிகளில் ஒருவராக புகழ்பெற்றவர்.

விரைவான உண்மைகள் இராமசந்திர பந்த் அமத்யா பவடேக்கர், மராட்டியப் பேரரசின் நிதியமைச்சர் ...
Remove ads

ஆரம்ப கால வாழ்க்கை

உள்ளூர் வருவாய் வசூல் பதவியிலிருந்து (குல்கர்னி) சிவாஜியின் அமைச்சரவையில் அமைச்சர் பதவிக்கு உயர்ந்த நீலகண்ட சோண்டியோ என்பவரின் (மிகவும் பிரபலமாக நீலோ சோண்டியோ என அழைக்கப்பட்டவர்) இளைய மகனாக இராமசந்திர பந்த் சுமார் 1650 இல் ஒரு தேசஸ்த் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார்.

இவரது குடும்பம் கல்யாண் பிவாண்டி அருகே இருக்கும் கொல்வான் கிராமத்திலிருந்து வந்தது. இவரது தாத்தா சோனோபந்த் மற்றும் மாமா அப்பாஜி சோண்டியோ ஆகியோர் சிவாஜியின் நெருங்கிய வட்டத்தில் இருந்தனர். இவரது குடும்பம் சமர்த்த இராமதாசருடன் நெருக்கமாக தொடர்புடையது.

Remove ads

தொழில்

1672 க்கு முன்னர், சிவாஜியின் நிர்வாகத்தில் இவர் பல்வேறு எழுத்தர் வேலைகளில் ஈடுபட்டிருந்தார். 1672 ஆம் ஆண்டில், இவரும் இவரது அண்ணன் நாராயணனும் சிவாஜியால் வருவாய்த்துறை அமைச்சர் பதவிக்கு (மஜூம்தார்) உயர்த்தப்பட்டனர். 1674 ஆம் ஆண்டில், முடிசூட்டு விழாவில், இப்பதவி அமத்யா என மறுபெயரிடப்பட்டது. மேலும், தலைப்பு இவருக்கு மட்டுமே வழங்கப்பட்டது. இவர் 1678 வரை இந்தப் பணியில் பணியாற்றினார். இவரது மரண படுக்கையில், சிவாஜி மராட்டிய பேரரசின் ஆறு தூண்களில் ஒருவராக இவரை குறிப்பிட்டார்.

1680 இல் சிவாஜி இறந்த பிறகு, சம்பாஜி மராட்டிய பேரரசின் ஆட்சியாளரானார். இவர் சம்பாஜியின் நிர்வாகத்துடன் பல்வேறு பதவிகளில் தொடர்ந்தார்.

ஔரங்கசீப்பிற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட அவரது மகனான இளவரசர் அக்பருடன் பேச்சுவார்த்தைகளுக்காக இவர் அனுப்பப்பட்டார். மேலும் 1685 ஆம் ஆண்டில், சம்பாஜி இவரை வியப்பூருக்கு ஒரு தூதராக சில முக்கியமான பேச்சுவார்த்தைகளுக்கு அனுப்பினார்.

Remove ads

குறிப்புகள்

நூலியல்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads