இராமன் ஆய்வுக் கழகம்

From Wikipedia, the free encyclopedia

இராமன் ஆய்வுக் கழகம்
Remove ads

இராமன் ஆய்வுக் கழகம் அல்லது இராமன் ஆராய்ச்சிக் கழகம் (Raman Research Institute) இந்தியாவின் பெங்களூருவில் அமைந்துள்ள ஒரு ஆய்வுக் கழகம். இக்கழகம் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர். ச. வெ. இராமனால் 1948ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது.[2]

Thumb
Lawn of the RRI[தெளிவுபடுத்துக]
விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...
Remove ads

ஆய்வுகள்[3] [4]

வரலாறு

அறிவியல் சம்பந்தமாக ஆய்வுகள் நடத்த தனி ஒரு ஆய்வுக்கூடம் அல்லது கழகம் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் ராமனிடத்தில் இருந்துகொண்டிருந்தது. அதற்காக ராமன் அப்போதைய மைசூர் மகாராஜாவிடம் உதவி கேட்டார். மைசூர் மகாராஜாவும் உதவ முன்வந்தார். மகாராஜா தற்போதைய பெங்களுருவில் மல்லேஸ்வரம் என்ற இடத்தில் 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தை ராமனுக்கு 1934 ஆம் ஆண்டு இந்திய அறிவியல் கழகம் ஆரம்பிப்பதற்காக கொடுத்து உதவினார். 1941 ஆம் ஆண்டு ராமன் இந்திய அறிவியல் கழகம் மற்றும் ராமன் ஆய்வு கழகம் ஆரம்பிக்க முதல் அடிக்கல் நாட்டப்பட்டது ஆனால் 1948 ஆம் ஆண்டு முதல்தான் ராமன் ஆய்வுக்கழகம் செயல்பாட்டிற்கு வந்தது. ராமன் எப்போதும் அரசாங்கத்திடம் உதவி கேட்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். ஆய்வுகளுக்குத் தேவையான நிதியை தனியாரிடம் இருந்து திரட்டினார். இந்திய அறிவியல் கழகம் மற்றும் ராமன் ஆய்வுக்கழகம் இரண்டிற்கும் இறுதிவரை ராமனே தலைவராக இருந்து வழிநடத்தினார்.[7]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads