இராமானுஜ கவிராயர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இராமானுஜ கவிராயர் (ஆங்கிலம்: Ramanuja Kavirayar) (பிறப்பு: 1780, ராமநாதபுரம்; இறப்பு: 1853, சென்னை) ஒரு தமிழ் அறிஞரும் கவிஞரும் ஆவார். சென்னையில் வாழ்ந்து தமிழிலக்கிய உலகில் கோலோச்சிய இவர் பல சிறந்த தமிழ் அறிஞர்களை தனது மாணாக்கர்களாகக் கொண்டிருந்தார். தமிழறிஞர் ஜி.யு. போப்பை உருவாக்கிய ஆசிரியராக இவர் அறியப்படுகிறார்.[1]

இராமானுஜ கவிராயர் தமிழ் செவ்வியல் நூல்களை முதன்முறையாக அச்சில் கொண்டு வரும் பணிக்கு முன்னோடியாக இருந்தது மட்டுமல்லாது அவற்றில் சிலவற்றிற்கு விளக்கவுரையும் எழுதினார். ஒரு சிறந்த கவிஞராக விளங்கினாலும், மீனாட்சிசுந்தரம் பிள்ளையைப் போலவே, இவரது தமிழாசிரியப் பணியே அவரது சிறந்த தமிழ்த் தொண்டாகக் கருதப்படுகிறது. நன்னுாலுக்கு எழுதிய உரை, அபூர்வமான மேற்கோள்களுடன், பெரும் அறிஞர்களால், இன்று வரை பாராட்டப்படுகிறது.[2] இவர் பல தமிழறிஞர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர். 1820-க்கும் 1853-க்கும் இடையிலான காலகட்டத்தில் மதராஸ் பட்டணத்தில் இருந்த பல ஐரோப்பிய தமிழ் அறிஞர்களுக்கு இவர் பயிற்சி அளிக்கும் குருவாக விளங்கினார். அந்நாளில் மொழி ஆசிரியர்களைக் குறிக்கும் சொல்லான "முன்ஷி" (அதாவது குரு) என்று அழைக்கப்படலானார்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads