இரா. நடராசன்

குழந்தை இலக்கிய எழுத்தாளர் , பள்ளி தலைமை ஆசிரியர் , கல்வியாளர் From Wikipedia, the free encyclopedia

இரா. நடராசன்
Remove ads

ஆயிஷா நடராசன் (எ) இரா. நடராசன் (Era Natarasan) 2014-ஆம் ஆண்டிற்கான பால சாகித்திய அகாதமி விருது பெற்ற சிறுவர் இலக்கிய எழுத்தாளர் .[1] இவர் எழுதிய ஆயிஷா எனும் சிறுகதை ஏற்படுத்திய தாக்கத்தால் இவர் ஆயிஷா நடராசன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். இந்த ஆயிஷா சிறுகதை இவருடைய இரா. நடராசன் சிறுகதைகள் என்ற தொகுப்பிலும் தனிநூலாகவும் கிடைக்கிறது. எளிய தமிழில் அறிவியல் கருத்துகளையும், சில மொழி பெயர்ப்பு நூல்களையும், மாணவர்களுக்கு உதவக்கூடிய எளிய அறிவியல் சோதனைகள் போன்ற பல நூல்களை எழுதியுள்ளார்.

விரைவான உண்மைகள் இரா நடராசன்Era Natarasan, தாய்மொழியில் பெயர் ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

இயற்பியல், கல்வியியல் மேலாண்மை, உளவியல் ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர் [2] மற்றும் எழுத்தாளர். கடலூரில் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இரா,நடராசன் பணியாற்றி வருகிறார். கடந்த 12 ஆண்டுகளாகத் தொடர்ந்து புத்தகங்களுக்காவே வெளிவரும் 'புத்தகம் பேசுது' மாத இதழின் ஆசிரியர்.

சிறுகதைகள்

இவரின் சிறுகதைகள் உலகளாவிய வாசகர் கவனத்தை ஈர்த்தவை. தமிழ் மொழியில் எழுதப்பட்ட இக்கதைகளில் சில தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம், பிரஞ்சு உட்பட பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. உலகச் சிறுகதை தொகுதிகள் சிலவற்றில் இவரின் சில கதைகள் இடம் பெற்றுள்ளன. இவைகளில் நான்கு கதைகள் குறும்படங்களாக எடுக்கப்பட்டுப் பன்னாட்டுப் பட விழாக்களில் விருதுகளைப் பெற்றுள்ளன.[3]

Thumb
2014 ஆம் ஆண்டு இரா. நடராசன் பால சாகித்திய அகாதமி விருது பெறுகிறார்
Remove ads

அங்கீகாரங்களும் விருதுகளும்

  • பால சாகித்திய அகாதமி விருது குழந்தைகள் இலக்கியத்தில் பங்களிப்பதற்காக வழங்கப்படுகிறது. இந்த விருது 23 மொழிக்கும் வழங்கப்படும். இவரது "விஞ்ஞான விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள்" படைப்பிற்காக இவ்விருது வழங்கப்பட்டது.[4][5]
  • "கணிதத்தின் கதை' எனும் நூலுக்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி துறை விருது வழங்கப்பட்டது.[1]
  • இவரது ஆயிஷா எனும் குறுநாவல் (பள்ளிக்கூட சிறுமியின் துயரக்கதை) தமிழில் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்தது.[6][7][8]

புத்தகங்கள்

  • இரா. நடராசன் சிறுகதைகள்
  • ஆயிஷா
  • இது யாருடைய வகுப்பறை...?
  • ஹிக்ஸ் போசான் வரை இயற்பியலின் கதை
  • 10 எளிய இயற்பியல் சோதனைகள்
  • 10 எளிய வேதியியல் சோதனைகள்
  • 10 எளிய உயிரியல் சோதனைகள்
  • ஒரு தோழனும் மூன்று நண்பர்களும்
  • கணிதத்தின் கதை
  • நம்பர் பூதம்
  • சீனிவாச ராமானுஜன் 125
  • விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள்
  • கலிலியோ (நாடகம்)
  • பிரெடரிக் டக்ளஸ் - அமெரிக்கக் கறுப்பு அடிமையின் சுயசரிதை (மொழிபெயர்ப்பு)

இவை தவிர்த்து மேலும் பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

Remove ads

மேலும் காண்க

பால சாகித்திய அகாதமி விருதுகள்

சான்றுகள்:

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads