இரா. நல்லகண்ணு

அரசியல் தலைவர் From Wikipedia, the free encyclopedia

இரா. நல்லகண்ணு
Remove ads

இரா. நல்லகண்ணு (R. Nallakannu, பிறப்பு: 26 திசம்பர் 1925) சுமார் 25 ஆண்டுகள் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார். 13 ஆண்டுகாலம் இந்திய பொதுவுடமைக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராகவும் இருந்துள்ளார்.[1] இந்திய சுதந்திர போராட்டம், விவசாயிகள் போராட்டம், தீண்டாமைக்கு எதிரான போராட்டம், கனிமவளக் கொள்ளைக்கு எதிரான போராட்டம் எனத் தனது வாழ்நாளில் குறிப்பிட்ட பகுதியை போராட்டம், சிறை வாழ்க்கை என வாழ்ந்துள்ளார்.[2]

விரைவான உண்மைகள் தகைசால் தமிழர்இரா. நல்லகண்ணு, தனிப்பட்ட விவரங்கள் ...
Remove ads

வாழ்க்கை வரலாறு‍

பிரிக்கப்படாத திருநெல்வேலி மாவட்டம், மாவட்டப் பிரிவினைக்குப் பின்பு, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 26 திசம்பர், 1925 ஆம் ஆண்டு பிறந்தார். நல்லகண்ணு 18 ஆவது வயதிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். [3] ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இரண்டாயிரம் மூட்டை நெல் வைத்திருப்பதைக் கண்டுபிடித்து ஜனசக்தி பத்திரிகையில் எழுதினார். அதைப் படித்த கலெக்டர், உடனடியாக நடவடிக்கை எடுத்து அத்தனை மூட்டைகளையும் பறிமுதல் செய்தார். இவருடைய முதல் நடவடிக்கை இதுவாகும். இனிமேல் மக்களுக்காக முழு நேரமும் உழைப்பது என்று முடிவெடுத்தார். அப்பாவிடம் சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறினார். கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடைவிதிக்கப்பட்ட போது நெல்லைச் சதி வழக்கில் கைது செய்யப்பட்டார். ஏழு ஆண்டுகள் இருட்டறை வாழ்க்கை நாங்கள் வெளியில் வந்தபோது நாடு சுதந்திரம் அடைந்திருந்தது. அன்று ஆரம்பித்தது அரசியல் பயணம் இன்று வரை தொடர்கிறது.

Remove ads

சாதி எதிர்ப்புப் போராளி

இவருடைய 80 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு கோடி ரூபாய் வசூலித்து கொடுத்தது கட்சி. அதை அந்த மேடையில் வைத்து கட்சிக்கே திருப்பிக் கொடுத்து விட்டார். தமிழக அரசு அம்பேத்கர் விருது கொடுத்து ஒரு இலட்சம் ரூபாயை வழங்கியது. அதில் பாதியைக் கட்சிக்கும் மீதியை விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் கொடுத்துவிட்டார்.

சாதிய அக்கிரமங்களுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். அதற்காக தன் வாழ்க்கையைச் சிறைக்கொட்டடிகளிலும், தலைமறைவு வாழ்க்கையிலும் கழித்தவர்.

விருதுகள்

  • தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவிடமிருந்து சகாயோகி விருது (14 ஆகத்து 2007)[4]
  • தமிழக அரசின் அம்பேத்கர் விருது (2007)[5]
  • அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நல மன்றத்தின் சமூக சேவைக்கான காந்திய விருது (3 அக்டோபர் 2008)[6]
  • மாவட்ட எழுத்தாளர் சங்கத்தின் ஜீவா விருது (21 சனவரி 2009)[7]
  • தகைசால் தமிழர் விருது (2022)[8]

போட்டியிட்ட மக்களவைத் தொகுதி

மேலதிகத் தகவல்கள் தேர்தல், தொகுதி ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads