இரிசோர்சுசாட்-2ஏ
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரிசோர்சுசாட் - 2ஏ (Resourcesat-2A) என்பது ஒரு இந்திய இயற்கை வள தொலையுணர்வு செயற்கைக்கோள் ஆகும். இதனை இந்திய விண்வெளி ஆய்வு மையம், 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 07 ஆம் திகதி புதன்கிழமை காலை 10.25 மணித்துளிகளுக்கு ஏவுகலம் சி36ன் மூலம் விண்ணில் ஏவியது. இதற்கு முன்னர் 2003 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் திகதி மற்றும் ஏப்ரல் மாதம் 2011 ஆம் ஆண்டும் இதேபோல் முறையே ஒரு தொலையுணர்வு செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டது. இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சதீஸ் தவான் விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. இதன் எடை 1,235 கிலோ கொண்டதாகும். [2] புதன் கிழமை காலை 10.25 விண்ணில் பாய்ந்த செயற்கைக்கோளானது சரியாக 18வது நிமிடத்தில் சூரிய துருவ சுற்றுவட்டப் பாதையில் 822 கிலோ மீற்றர்கள் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டது.
Remove ads
மேலும் பார்க்க
வெளி இணைப்புகள்
- Official Website பரணிடப்பட்டது 2017-10-04 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads