இருகுளோரின் மூவாக்சைடு
வேதிச்சேர்மம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இருகுளோரின் மூவாக்சைடு (dichlorine trioxide) என்பது Cl2O3 என்ற மூலக்கூற்று வாய்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். 1967 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட குளோரினின் ஆக்சைடான இச்சேர்மம் கருமைநிற திண்மமாகக் காணப்படுகிறது. மிகக்குறைந்த வெப்பநிலையில் இந்தச் சேர்மம் வெடிக்கும் இயல்பு கொண்டதாகும்[2]. குளோரின் ஈராக்சைடு குறைந்த வெப்ப நிலையில் Cl2O6, Cl2 மற்றும் O2 என ஒளிச்சிதைவு அடைந்து உருவாகிறது. இருகுளோரின் மூவாக்சைடின் கட்டமைப்பு OCl-ClO2 என்பதாகவும் மாற்று வடிவம் Cl-O-ClO2 இருக்கச் சாத்தியம் உள்ளதாகவும் நம்பப்படுகிறது.[3]. குளோரோசு அமிலத்தின் கருதுகோள் நிலையிலுள்ள நீரிலியாக இது காணப்படுகிறது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads