இருங்காட்டுக்கோட்டை
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள தொழில் நகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இருங்காட்டுக்கோட்டை (Irungattukottai) சென்னைக்கு மிக அருகே சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் (நெ. சா: 4) உள்ள ஒரு பகுதியாகும். இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இருங்காட்டுகோட்டையில் தமிழக அரசும் பல தொழில் மற்றும் உற்பத்தி நிறுவனங்களும் அதிகளவில் தங்கள் முதலீடுகளை செய்துள்ளமையால் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக மாறியுள்ளது.

தமிழக அரசானது இங்கு தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்ற கழகம் (சிப்காட்) பெருந்தொழில் வளாகத்தையும் சிறப்பு பொருளாதார மண்டலத்தையும் அமைத்துள்ளது.
இருங்காட்டுக்கோட்டையில் ஹுண்டாய் கார் நிறுவனமானது மிகப்பெரிய கார் தொழிற்சாலையை அமைத்துள்ளது. இதன் மூலம் ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், இலத்தீன் அமெரிக்கா, ஆத்திரேலியா உள்ளிட்ட 85 நாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்யும் மையமாக இருங்காட்டுக்கோட்டை விளங்குகிறது. இந்தியாவின் முதல் தனியார் வான்வழி சரக்கு போக்குவரத்து நிலையம் அமைக்கும் பணியானது 2015 சூலை 17 அன்று துவங்கப்பட்டுள்ளது.[1]
பொ.ஊ. 1025-ல் சோழர்காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோவில் சிதிலமடைந்த நிலையில் இங்கு அமைந்துள்ளது. இது இராஜராஜ சோழனால் நிறுவப்பட்டது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads