இரும்பு(II) ஐதராக்சைடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரும்பு(II) ஐதராக்சைடு (Iron(II) hydroxide) என்பது Fe(OH)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பெரசு ஐதராக்சைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. இரும்பு(II) சல்பேட்டு போன்ற இரும்பு(II) உப்புகள் ஒரு ஐதராக்சைடுடன் சேர்த்து சூடுபடுத்தும் போது இரும்பு(II) ஐதராக்சைடு உருவாகிறது. இரும்பு(II) ஐதராக்சைடு ஒரு வெண்மையான திண்மமாகும். ஆனால் ஆக்சிசன் சுவடுகள் காரணமாக இளம்பச்சை சாயம் தென்படுகிறது. காற்றால் ஆக்சிசனேற்றம் அடைந்த இத்திண்மம் சிலசமயஙளில் பச்சை துரு எனப்படுகிறது.
Remove ads
தயாரிப்பு
இரும்பு(II) ஐதராக்சைடு தண்ணீரில் சிறிதளவே கரைகிறது(1.43 × 10−3 கிராம்/லிட்டர் அல்லது 10−14 மோல்/லிட்டர்) இரும்பு(II) மற்றும் ஐதராக்சைடு உப்புகளின் வினையிலிருந்து இரும்பு(II) ஐதராக்சைடு வீழ்படிவாகிறது:[3]
- FeSO4 + 2NaOH → Fe(OH)2 + Na2SO4.
கரைசல் ஒருவேளை ஆக்சிசன் நீக்கப்படாவிட்டால் இரும்பு ஒடுக்கப்படுகிறது. வீழ்படிவின் நிறம் பச்சையிலிருந்து செம்பழுப்பு நிறத்திற்கு மாறுகிறது. இரும்பு(III) இன் இருப்புக்கு ஏற்ப இந்நிறமாற்றம் மாறுபடுகிறது. தொடர்ச்சியான ஆக்சிசனேற்றத்தால் இரும்பு(II) எளிமையாக இரும்பு(III) ஆல் பதிலீடு செய்யப்படுகிறது.
பிற வினைகளில் உடன் விளைபொருளாகவும் இரும்பு(II) ஐதராக்சைடு உருவாகிறது. சிடரைட்டு உற்பத்தியை உதாரணமாகக் கூறலாம்.
Remove ads
கட்டமைப்பு
இரும்பு(II) ஐதராக்சைடு இரட்டை அடுக்கு கட்டமைப்பில் உள்ளது.
தொடர்புடைய பொருட்கள்
பச்சைத் துரு சமீபத்தில் கனிமவியல் வடிவில் கண்டறியப்பட்டுள்ளது. பச்சைத் துருவின் அனைத்து வடிவங்களும் தனித்த இரும்பு(II) ஐதராக்சைடு சேர்மத்திலிருந்து மாற்பட்டு அணைவுச் சேர்மமாக உள்ளன. இரும்பு(II) ஐதராக்சைடின் இயற்கை வடிவமான அமாகினைட்டு கனிமம் (Fe,Mg)(OH)2. மிகவும் அரிதாகக் காணப்படுகிறது
வினைகள்
காற்றில்லா நிபந்தனைகளில் இரும்பு(II) ஐதராக்சைடு நீரிலுள்ள புரோட்டான்களால் ஆக்சிசனேற்றம் செய்யப்பட்டு மேக்னடைட்டு எனப்படும் இரும்பு (II,III) ஆக்சைடாகவும் மூலக்கூற்று ஐதரசனாகவும் உருவாகிறது. இச்செயல்முறை செக்கோர் வினையில் விவரிக்கப்படுகிறது.
- 3 Fe(OH)2 → Fe3O4 + H2 + 2 H2O
செலீனைடு மற்றும் செலீனேட்டு போன்ற எதிர்மின் அயனிகள் இரும்பு(II) ஐதராக்சைடின் நேர்மின் அயனிகளால் எளிதாக ஈர்க்கப்படுகின்றன. அங்கு இவை அடுத்தடுத்து Fe2+ ஆகக் ஒடுக்கப்படுகின்றன. விளையும் பொருட்கள் (Se0, FeSe,அல்லது FeSe2). கரையும் தன்மையற்று உள்ளன.
ஈர நிலங்களில் உள்ள தண்ணீர் இருப்புகளில் உள்ள செலீனேட்டு மற்றும் செலீனைட்டு நச்சுகளை அகற்ற உதவும் முகவராகப் பயன்படுத்த இரும்பு(II) ஐதராக்சைடு பரிசீலிக்கப்பட்டு வருகிறது. செலீனேட்டு மற்றும் செலீனைட்டு நச்சுகளை செலீனியம் உலோகமாக இரும்பு(II) ஐதராக்சைடால் ஒடுக்க முடியும் என கருதப்படுகிறது. செலீனியம் நீரில் கரையாது என்பதால் அதை எளிதாக வீழ்படிவாக்கி வெளியேற்றமுடியும்[4]. நிக்கல் இரும்பு மின்கல அடுக்கில் எதிர்சுமை மின்முனையாக இரும்பு(II) ஐதராக்சைடைப் பயன்படுத்த இயலும்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads