இர. பி. பட்நாயக்

இந்திய இசையமைப்பாளர் From Wikipedia, the free encyclopedia

இர. பி. பட்நாயக்
Remove ads

இரவீந்திர பிரசாத் பட்நாயக் (Ravindra Prasad Patnaik) ஓர் இந்திய இசையமைப்பாளரும், பாடகரும், நடிகரும்,[1][2] திரைக்கதை ஆசிரியரும் மற்றும் திரைப்பட இயக்குநரும்[3][4] ஆவார். இவர் தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழ் மொழிப் படங்களில் பணியாற்றுகிறார்.[5] இவர் மூன்று தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளையும் மூன்று நந்தி விருதுகளையும் பெற்றுள்ளார்.[6][7] இவர் தனது நேரடி இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்துவதற்காக உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்துவருகிறார்..

விரைவான உண்மைகள் இர. பி. பட்நாயக்R. P. Patnaik, பின்னணித் தகவல்கள் ...

பட்நாயக் திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற விருப்பத்துடன் திரைப்படத் துறையில் நுழைந்தார். முதலில் நீகோசம் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநராக மாறிய தேஜா இவருக்கு சித்திரம் படத்தின் மூலம் ஒரு வாய்ப்பை கொடுத்தார்.[8] பட்நாயக் 2008 ஆம் ஆண்டு வெளியான அந்தமைன மனசுலோ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.[9] பின்னர், மனலோ ஒக்கடு படத்தை இயக்கினார்.[10] இவரது சகோதரர் கௌதம் பட்நாயக் என்பவரும் கேராட்டம் (2011) என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.[11]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads