இறகுப்பந்தாட்டம்
மட்டை விளையாட்டு From Wikipedia, the free encyclopedia
Remove ads
இறகுப்பந்து (Badminton) விளையாட்டினை பிரிட்டானிய இராணுவ வீரர்கள் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கிலாந்தில் அறிமுகம் செய்தனர். இவ்விளையாட்டினை 1873-ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் ப்யூபர்ட் பிரபுவின் பாட்மிண்டன் மாளிகை (Badminton House) எனும் இடத்தில் ஆடியதால், பாட்மிண்டன் என்று அழைக்கத் தொடங்கினர். இது ஒரு மட்டைப் பந்தாட்ட வகை விளையாட்டு. இதில் பூக்குவளை போல் இருக்கும் இறகுகளால் ஆன ஒரு பந்தை, இறுக்கமாகப் பின்னிய வலை மட்டையால் வலைக்கு மேலாகப் போய் எதிர்த்தரப்பு ஆடுகளத்துக்குள் விழுமாறு அடித்து ஆடுவர்[1][2][3]

Remove ads
ஆடுகளம்
இறகுப் பந்தாட்டத்தின் ஆடுகளம் ஒற்றையர் ஆடுகளம், இரட்டையர் ஆடுகளம் என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
ஒற்றையர் ஆடுகளம்
ஒற்றையர் ஆடுகளத்திற்கான நீளம் 13.40 மீட்டர், அகலம் 5.18 மீட்டர் கொண்டிருக்கும். மையக் கோட்டிலிருந்து ஒவ்வொரு பக்கத்திலும் 1.98 மீட்டர் நீளத்திற்கு குறுகிய பந்து போடும் கோடு (Short Service Line) இருக்க வேண்டும். தரையிலிருந்து வலையின் உயரம் 5 அடி இரண்டு பக்கங்களிலும் 5 அடி 1 அங்குலம் என்பதாக இருக்க வேண்டும்.
இரட்டையர் ஆடுகளம்
இரட்டையர் ஆடுகளத்திற்கான நீளம் 13.40 மீட்டர், அகலம் 6.10 மீட்டர் கொண்டிருக்கும். மையக் கோட்டிலிருந்து ஒவ்வொரு பக்கத்திலும் 1.98 மீட்டர் நீளத்திற்கு குறுகிய பந்து போடும் கோடு இருக்க வேண்டும். இரண்டு பக்கங்களின் பின் கோட்டிற்கு உட்புறம் 76 செ.மீக்கு இரட்டையருக்கான நீள பந்து போடும் கோடு இருக்க வேண்டும். பக்கக் கோட்டிற்கு உட்புறம் இரண்டு பக்கங்களிலும் 46 செ.மீ க்கு ஒற்றையருக்கான பக்கக் கோடு இருக்க வேண்டும்.
Remove ads
பந்து

இறகுப் பந்தின் எடை 4.73 கிராம் முதல் 5. 50 கிராம் வரை இருக்கலாம். இறகுகள் 14 முதல் 16 வரை இருக்கலாம். பந்தின் விட்டம் 1 முதல் 1 1/8 அங்குலம் கார்க்கின் மேல் இருக்கும். நீளம் 2 1/2 முதல் 2 3/4 அங்குலம் வரை இருக்கலாம்.
மட்டை
மட்டையின் உயரம் 26 முதல் 27 அங்குலம் வரையும் விட்டம் 8 முதல் 9 அங்குலம் வரையும் இருக்க வேண்டும்.
ஆட்டக் கணக்கு
ஓர் ஆட்டத்தில் எத்தரப்பினர் 21 புள்ளிகள் எடுக்கிறார்களோ அவ்வணி வெற்றி பெறும். ஒரு போட்டியாட்டத்தில் மூன்றில் இரண்டு மோதல்களில் வென்ற அணியே வெற்றி பெற்ற அணியாகும்.
இருவர் ஆட்டத்தில் ஒருவர் முதலெறிதலில் (service) ஆட்டம் இழந்தால் இரண்டாம் நபருக்கு வாய்ப்பு அளிக்கப்படும். அவருக்குப் பின்னரே எதிர் அணிக்கு கொடுக்கப்படும்.
இரு அணிகளும் சமமாக 20 புள்ளிகள் வென்றெடுத்தால் 2 புள்ளிகள் முன்னணி பெறும் அணி வெற்றி பெறும் .
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads