இலங்கைக்கான ஐ.நா. நிபுணர் குழு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இலங்கைக்கான ஐ.நா. நிபுணர் குழு இலங்கையில் நடந்த போரின் இறுதிப்பகுதியில் இடம்பெற்றதாகக் குற்றம்சாட்டப்படும் சர்வதேசமனித உரிமைகள்,மனிதாபிமானச்சட்ட மீறல்கள் என்பவைக்கான பொறுப்புப்பற்றிய விடயங்கள் குறித்து ஐ.நா.செயலாளர் நாயகம் பான்கீ மூன் அவர்களுக்கு ஆலோசனை கூறுவதற்காக அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழுவாகும். இதற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் ஆலோசனை வழங்குவது மட்டுமே. அது இலங்கையைக் கட்டுப்படுத்தாது. இந்தக்குழுவினர் இலங்கைக்குள் நுழைவதற்கு இலங்கைஅரசு அனுமதி மறுத்துள்ளது.

Remove ads

வரலாறு

இந்த நிபுணர்குழு முதலில் 2010 யூன் 22இல் நியமிக்கப்பட்டது.அது தனது பணியை 2010 செப்ரெம்பரில் ஆரம்பித்தது.பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் 2010 ஒக்ரோபர் நடுப்பகுதியில் கோரப்பட்டது.அதற்கான முடிவுத்திகதி 2010 டிசெம்பர் 15 ஆகும்.இக்குழுவிற்கான நான்குமாதப் பதவிக்காலம் 2011 சனவரி நடுப்பகுதியில் முடிவடைகிறது.

குழு உறுப்பினர்கள்

இந்த நிபுணர் குழுவில் யஸ்மின் சூகா, மார்சுகி டருஸ்மன், ஸ்ரிவன் ரற்னர் ஆகியோர் இடம்பெறுகின்றனர். திருமதி சூகா முன்பு தென்னாபிரிக்காவின் உண்மை, நல்லிணக்க ஆணைக்குழுவில் உறுப்பினராகப் பணிபுரிந்தவர். திரு.மார்சுகி இந்தோனேசியக்குடியரசின் சட்டவாளர்நாயகமாக 1999-2001 காலப்பகுதியில் கடமையாற்றியவர். இவர் இந்தோனேசியாவின் தேசிய மனித உரிமை ஆணைக்குழுவின் உறுப்பினராக இருந்தவர், ஐ.நா.வின் இரு உண்மைகாண் செயற்பாட்டிலும் பங்குபற்றியவர்.பேராசிரியர் ஸ்ரிவன் ரற்னர் மிசிகன் பல்கலைக்கழக சட்டப்பள்ளியில் சட்டத்துறைப் பேராசிரியராக இருப்பவர்.

Remove ads

ஆராய்வு எல்லை

அவர்கள் வெளியிட்ட ஊடகஅறிக்கையில் அதன் அதிகார எல்லைகள் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது: "இந்தக்குழுவினர் இலங்கையில் இடம்பெற்றதாகக் குற்றம்சாட்டப்படும் ஏதாவது சட்டமீறல்களின் இயல்புகள், அவற்றின் அளவுகளைக் கவனத்தில்கொண்டு அவற்றிற்கான பொறுப்பைத் தீர்மானிக்கும் வழிமுறைக்கேற்பப் பிரயோகிக்கக்கூடிய சர்வதேசத் தராதரங்கள், ஓப்பீட்டுஅனுபவங்கள் என்பவற்றை ஆராய்வர். இந்தக்குழு செயலாளர்நாயகத்திற்கு ஆலோசனை வழங்குவதற்கானது; அது விசாரணைசெய்யும் அல்லது உண்மைகாண் குழுவல்ல."

முறைப்பாடுகள் சமர்ப்பித்தல்

ஐ.நா. நிபுணர்குழுவினர் எவரிடமிருந்தும் தமது விசாரணைக்குரியதான முறைப்பாடுகளைக் கோரியுள்ளனர்.இதனை மின்னஞ்சல்மூலம் மட்டுமே, 2010 டிசெம்பர் 15ந்திகதிக்கு முன்பாக அனுப்பவேண்டும்.

எதிர்பார்க்கப்படும் விளைவுகள்

இலங்கையில் இடம்பெற்றதாகக் குற்றம்சாட்டப்படும் மனிதஉரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் பற்றி பக்கச்சார்பற்ற சர்வதேசவிசாரணை இடம்பெறவேண்டுமென இக்குழுவினர் சிபாரிசு செய்யலாம். அல்லது அவர்கள் வெறுமனே இலங்கை அரசாங்கம் தனது மனித உரிமைக்கான பொறுப்புகளை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதற்கான சிபாரிசுகளை வழங்கலாம்.

அறிக்கை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads