இலங்கையின் பிரித்தானியத் தேசாதிபதிகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இலங்கையின் பிரித்தானிய ஆளுநர்கள் அல்லது இலங்கையின் பிரித்தானிய தேசாதிபதிகள் (British governors of Ceylon) என்போர் 1798 முதல் 1948 வரையிலான காலப்பகுதியில் ஐக்கிய இராச்சியத்தின் முடிக்குட்பட்ட நாடாக இலங்கை இருந்தபோது ஐக்கிய இராச்சியத்தின் மன்னரின் அல்லது அரசியின் பிரதிநிதியாக இலங்கையை ஆட்சி செய்த அலுவலர் ஆவர்.

இலங்கையில் பிரித்தானியரின் ஆட்சி முடிவுக்கு வந்து 1948 இல் முடிக்குரிய குடியரசாக ஆக்கப்பட்ட பின்னர் இப்பதவி இலங்கையில் பிரித்தானிய மகாராணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வண்ணம் மகா தேசாதிபதி என்ற அலுவலரால் பிரதியிடப்பட்டது. அதாவது, மகா தேசாதிபதி பிரித்தானிய மணிமுடியைப் பிரநிதித்துவப்படுத்தினாரே தவிர பிரித்தானிய அரசாங்கத்தையல்ல. 1972 இல் இலங்கை குடியரசாக மாற்றப்பட்ட பின்னர் மேற்படி பதவி அகற்றப்பட்டு சனாதிபதி பதவியின் மூலம் பிரதியிடப்பட்டது.
Remove ads
தேசாதிபதி
ஐக்கிய இராச்சியத்தின் மன்னரினால் அல்லது அரசியினால் அதன் பிரதமரின் ஆலோசனையின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட தேசாதிபதியே இலங்கையில் நிறைவேற்றதிகாரமுடையவராக ஆங்கிலேய ஆட்சிக் காலம் முழுவதிலும் காணப்பட்டார். அவரே நிறைவேற்றுச் சபையினதும் பிரித்தானிய இலங்கையினதும் தலைவராக இருந்தார்.
தேசாதிபதியே பிரித்தானிய இலங்கையின் அதிகாரமிக்க அலுவலராக இருந்தாரெனினும் இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் மாத்திரம் சேர் ஜெப்ரி லெய்டன் முதன்மைக் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டு தேசாதிபதியிலும் கூடிய அதிகாரம் வழங்கப்பட்டிருந்தார். இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தராக தேசாதிபதியே இருந்தார்.
Remove ads
தேசாதிபதிகள் (1798–1948)
இலங்கையில் 1796 ஆம் ஆண்டே ஆங்கிலேயர் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியபோதும் இலங்கைக்கான முதலாவது பிரித்தானியத் தேசாதிபதி 1798 ஆம் ஆண்டிலேயே நியமிக்கப்பட்டார். அதற்கு இடைப்பட்ட காலத்தில் சென்னை ஆளுநரே பிரித்தானியருக்குக் கீழிருந்த இலங்கைப் பகுதிகளை நிருவகித்தார்.
- பிரடெரிக் நோத், 12 ஒக்டோபர் 1798–19 யூலை 1805
- சேர் தோமசு மெயிற்லண்ட், 19 யூலை 1805–19 மார்ச் 1811
- ரொபர்ட் பிரவுன்ரிக், 11 மார்ச் 1812–1 பெப்ரவரி 1820
- எட்வர்ட் பாகெட், 2 பெப்ரவரி 1822–6 நவம்பர் 1822
- எட்வர்ட் பார்ன்சு, 18 யனவரி 1824–13 ஒக்டோபர் 1831
- சேர் ரொபர்ட் வில்மொட் ஹோர்டன், 23 ஒக்டோபர் 1831–7 நவம்பர் 1837
- ஜேம்சு அலெக்சாண்டர் ஸ்டுவர்ட் மெக்கன்சீ, 7 நவம்பர் 1837–15 ஏப்ரல் 1841
- சேர்r கொலின் கேம்ப்பெல், 15 ஏப்ரல் 1841–19 ஏப்ரல் 1847
- டொரிங்டன் பிரபு, 29 மே 1847–18 ஒக்டோபர் 1850
- சேர் ஜோர்ஜ் வில்லியம் அண்டர்சன், 27 நவம்பர் 1850–18 யனவரி 1855
- ஹென்றி ஜோர்ஜ் வோர்ட், 11 மே 1855–30 யூன் 1860
- சார்ள்சு ஜஸ்டின் மெக்கார்தி, 22 ஒக்டோபர் 1860–1 டிசம்பர் 1863
- சேர் ஹெர்குயிலிசு ரொபின்சன், 21 மார்ச் 1865–4 யனவரி 1872, 16 மே 1865 வரை இடைக்கால தேசாதிபதி
- வில்லியம் ஹென்றி கிரெகரி, 4 மார்ச் 1872–4 செப்டெம்பர் 1877
- சேர் ஜேம்சு ரொபர்ட் லோங்டன், 4 செப்டெம்பர் 1877–10 யூலை 1883
- சேர் ஆர்தர் ஹமில்டன் கோர்டன், 3 டிசம்பர் 1883–28 மே 1890
- ஆர்தர் எலிபேங்க் ஹெவ்லொக், 28 மே 1890–24 ஒக்டோபர் 1895
- ஜோசப் வெஸ்ட் ரிஜ்வே, 10 பெப்ரவரி 1896–19 நவம்பர் 1903
- சேர் ஹென்றி ஆர்தர் பிளேக், 3 டிசம்பர் 1903–11 யூலை 1907
- சேர் ஹென்றி எட்வர்ட் மெக்கல்லம், 24 ஓகத்து 1907–24 யனவரி 1913
- ரொபர்ட் சால்மர்சு, 18 ஒக்டோபர் 1913–4 டிசம்பர் 1915
- சேர் ஜோன் அண்டர்சன், 15 ஏப்ரல் 1916–24 மார்ச் 1918
- சேர் வில்லியம் ஹென்றி மெனிங், 10 செப்டெம்பர் 1918–1 ஏப்ரல் 1925
- சேர் ஹப் கிளிபோர்ட், 30 நவம்பர் 1925–1927
- சேர் ஹர்பர்ட் ஸ்டான்லி, 20 ஓகத்து 1928–11 பெப்ரவரி 1931
- சேர் கிரெயிமி தொம்சன், 11 ஏப்ரல் 1931–20 செப்டெம்பர் 1933
- சேர் ரெஜினால்ட் எட்வர்ட் ஸ்டப்ஸ், 23 டிசம்பர் 1933–30 யூன் 1937
- சேர் அண்ட்ரூ கல்டெகொட், 16 ஒக்டோபர் 1937–19 செப்டெம்பர் 1944
- சேர் ஹென்றி மொங்க் மேசன் மூர், 19 செப்டெம்பர் 1944–4 பெப்ரவரி 1948
Remove ads
இடைக்கால தேசாதிபதிகள்
- ஜோன் வில்சன், 19 மார்ச் 1811–11 மார்ச் 1812, முதற் தடவை
- எட்வர்ட் பார்ன்சு, 1 பெப்ரவரி 1820–2 பெப்ரவரி 1822
- ஜேம்ஸ் கேம்ப்பெல், 6 நவம்பர் 1822–18 யனவரி 1824
- ஜோன் வில்சன், 13 ஒக்டோபர் 1831–23 ஒக்டோபர் 1831, இரண்டாவது தடவை
- ஜேம்ஸ் எமர்சன் டென்னன்ட், 19 ஏப்ரல் 1847–29 மே 1847
- சார்ள்சு ஜஸ்டின் மெக்கார்தி, 18 ஒக்டோபர் 1850–27 நவம்பர் 1850, முதற் தடவை
- சார்ள்சு ஜஸ்டின் மெக்கார்தி, 18 யனவரி 1855–11 மே 1855, இரண்டாவது தடவை
- ஹென்றி பிரடெரிக் லொக்யர், 30 யூன் 1860–30 யூலை 1860
- சார்ள்சு எட்மண்ட் வில்கின்சன், 30 யூலை 1860–22 ஒக்டோபர் 1860
- டெரன்சு ஓ பிரயன், 1 டிசம்பர் 1863–21 மார்ச் 1865
- சேர் ஹெர்குயிலிஸ் ரொபின்சன், 21 மார்ச் 1865–4 யனவரி 1872, 16 மே 1865 வரை இடைக்கால தேசாதிபதி
- ஹென்றி டர்னர் இர்விங், 4 யனவரி 1872–4 மார்ச் 1872
- ஜோன் டக்ளஸ், 10 யூலை 1883–3 டிசம்பர் 1883
- எட்வர்ட் நொயெல் வோகர், 24 ஒக்டோபர் 1895–10 பெப்ரவரி 1896
- எட்வர்ட் பிலிம் தர்ன், 19 நவம்பர் 1903–3 டிசம்பர் 1903
- ஹப் கிளிபோர்ட், 11 யூலை 1907–24 ஓகத்து 1907
- ரெஜினால்ட் எட்வர்ட் ஸ்டப்ஸ், 24 யனவரி 1913–18 ஒக்டோபர் 1913, முதற் தடவை
- ரெஜினால்ட் எட்வர்ட் ஸ்டப்ஸ், 4 டிசம்பர் 1915–15 ஏப்ரல் 1916, இரண்டாவது தடவை
- ரெஜினால்ட் எட்வர்ட் ஸ்டப்ஸ், 24 மார்ச் 1918–10 செப்டெம்பர் 1918, மூன்றாவது தடவை
- செசில் கிளெமன்ற்டி, 1 ஏப்ரல் 1925–18 ஒக்டோபர் 1925
- எட்வர்ட் புரூசு அலெக்சாண்டர், 18 ஒக்டோபர் 1925–30 நவம்பர் 1925
- பேர்னார்ட் ஹென்றி போர்டிலன், 11 பெப்ரவரி 1931–11 ஏப்ரல் 1931
- பிரான்சிசு கிரெயிமி டிரெல், 20 செப்டெம்பர் 1933–23 டிசம்பர் 1933
- மெக்சுவெல் மெக்லகன் வெடர்பர்ன், 30 யூன் 1937–16 ஒக்டோபர் 1937
மேலும் பார்க்க
- இலங்கையின் ஒல்லாந்து தேசாதிபதிகள்
- இலங்கையின் மகா தேசாதிபதி
- இலங்கை வரலாறு
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads