இலங்கை மஞ்சள் சிட்டு
பறவை துணையினம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இலங்கை மஞ்சள் சிட்டு அல்லது இலங்கை மாம்பழச் சிட்டு (அறிவியல் பெயர்: Aegithina tiphia multicolor) என்பது மாம்பழச்சிட்டின் துணையினம் ஆகும்.[1] இப்பறவை தென்மேற்கு இந்தியா மற்றும் இலங்கையில் காணப்படுகிறது.
விளக்கம்
இலங்கை மஞ்சள் சிட்டு தோற்றத்திலும் அளவிலும், பழக்க வழக்கத்திலும் தெற்கத்திய மஞ்சள் சிட்டை ஒத்தது. இனப்பெருக்கம் செய்யும் காலத்தில் ஆண் பறவையின் மேல் தோற்றம் ஆழ்ந்த கறுப்பாகவும் இனப்பெருக்கம் செய்யாத காலங்களில் ஆழ்ந்த மஞ்சள் தோய்ந்த பச்சையாகவும் காணப்படுவதால் இது ஒரு தனித்த துணையினமாக பிரிக்கப்பட்டுள்ளது.[2]
பரவலும் வாழிடமும்
இப்பறவை தென்மேற்கு இந்தியா மற்றும் இலங்கையில் காணப்படுகிறது. தென்மேற்கு இந்தியாவில் பாலக்காட்டுக் கணவாய்ப் பகுதிக்கு தெற்கே காணப்படுகிறது. தமிழ்நாட்டில் இராமேசுவரம் தீவில் காணப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads