இலச்சு மகாராஜ்

From Wikipedia, the free encyclopedia

இலச்சு மகாராஜ்
Remove ads

பண்டிட் இலச்சு மகாராஜ் (Lachhu Maharaj) (1901-1978) இவர் ஓர் இந்திய பாரம்பரிய நடனக் கலைஞரும் கதக்கின் நடன இயக்குனருமாவார். லக்னோவில் உள்ள புகழ்பெற்ற கதக் நிபுணர்களின் குடும்பத்தில் இருந்து வந்த இவர், திரைப்பட நடன இயக்குநராக, இந்தி சினிமா, குறிப்பாக முகல்-இ-அசாம் (1960) மற்றும் பக்கீசா (1972) ஆகியவற்றிலும் பணியாற்றினார். 1957ஆம் ஆண்டு, இந்தியாவின் இசை, நடனம் மற்றும் நாடகத்திற்கான தேசிய அகாடமியான சங்க நாடக அகாதமி கலைஞர்களுக்கான மிக உயர்ந்த விருதான, சங்கீத நாடக அகாதமி விருதினை வழங்கியது.

விரைவான உண்மைகள் இலச்சு மகாராஜ், பின்னணித் தகவல்கள் ...
Remove ads

ஆரம்பகால வாழ்க்கை

ஏறக்குறைய பத்து ஆண்டுகளாக தனது மாமா மற்றும் அயோத்தி நவாபின் அரசவை நடனக் கலைஞரான பண்டிட் பிந்தாடின் மகாராஜிடமிருந்து விரிவான பயிற்சி பெற்றார். இவர் பக்கவாத்தியம், தபலா மற்றும் இந்துஸ்தானி பாரம்பரிய குரல் இசை ஆகியவற்றையும் கற்றறிந்தார்.

தொழில்

பின்னர், இவர் மும்பைக்குச் சென்றார். அங்கு வளர்ந்து வரும் திரையுலகம் கதக்கை பரந்த பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல உதவியது. இவர், மஹால் (1949), முகல்- இ-அசாம் (1960), சோதி சோதி பேடன் (1965) மற்றும் பக்கீசா (1972) போன்றத் திரைப்படங்களில் நடனக் காட்சிகளின் நடனக் கலைக்காக பாராட்டப்பட்டார்.[2] கௌதம புத்தர், சந்திரவாலி மற்றும் பாரதிய கிசான் போன்ற இவரது பாலேக்கள் புகழ் பெற்றன. உத்தரபிரதேச அரசு லக்னோவில் தொடங்கிய கதக் கேந்திரத்தின் நிறுவனர் இயக்குநராகவும் இருந்தார்.

Remove ads

விருதுகள்

இவர் வென்ற பல மதிப்புமிக்க விருதுகளில், குடியரசுத் தலைவர் விருது மற்றும் 1957 ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாதமி விருது போன்றவை குறிப்பிடத்தக்கது.[3]

மரபு

செப்டம்பர் 2007 இல், லக்னோவில் இவரது பிறந்த நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதற்காக இரண்டு நாள் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டது. இவரது மனைவி இரமா தேவி, இவரது சீடர்களான நளினி மற்றும் கமலினி ஆகியோரின் முன்னிலையில், இவரைப் பற்றிய ஒரு புத்தகமும் வெளியிடப்பட்டது. மேலும், இவர் நிறுவிய கதக் கேந்திரா நடன நிறுவனத்தின் மாணவர்கள், மேக் மல்ஹார் என்ற பாலேவை நடத்தினார்.[4]

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads