இலட்சத்தீவுக் கடல்
கடல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
லட்சத்தீவுக் கடல் அல்லது லட்சத்தீவுகள் கடல் (Laccadive Sea) என்பது இந்தியா (அதன் லட்சத்தீவுகள் உட்பட), மாலத்தீவு, இலங்கை இடையில் அமைந்துள்ள கடல் பகுதி ஆகும். இது கேரளா மாநிலத்தின் மேற்கே அமைந்துள்ளது. இந்தக் கடலில் ஆண்டு முழுவதும் நிலையான நீர் வெப்பநிலை உள்ளது. எனவே இந்த கடல், கடல் உயிரினங்கள் வளம் நிறைந்த பகுதியாகத் திகழ்கிறது. இங்கு அமைந்துள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதி மட்டும் 3,600 வகை கடல் வாழ் உயிரினங்களுக்கு வாழ்விடமாகத் திகழ்கிறது.
சர்வதேச கடலியல் அமைப்பு பின்வருமாறு லட்சத்தீவுகள் கடல் எல்லையை வரையறுக்கிறது:[2]
- மேற்கே இந்தியாவின் மேற்கு கடலோரத்தில் 'சதாசிவகாட்' அட்சரேகையில் (14° 48'N 74° 07'E) இருந்து 'கோரா திவ்' (13° 42'N 72° 10'E) மற்றும் அதைத் தொடர்ந்து மேற்கு பக்கத்தில் [லட்சத்தீவுகள்] மற்றும் கீழே மாலத்தீவுக்கூட்டத்தில் அட்டு பவளத்தீவின் இறுதித் தெற்கு முனைவரையில்.
- தெற்கே இலங்கையில் தேவேந்திரமுனை பகுதியில் இருந்து 'அட்டு' பவளத்தீவின் இறுதித் தெற்கு முனைவரையில்.
- கிழக்கே இலங்கை மற்றும் இந்திய மேற்கு கரையோரப் பகுதிகள் வரையில்.
- வடகிழக்கே ஆதாம் பாலம் (இந்தியா மற்றும் இலங்கை இடையே) வரையில்.
Remove ads
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads