இலட்சம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஒரு இலட்சம் (ⓘ) (Lakh) அல்லது ஒரு நியுதம் என்பது, எண்ணிக்கையில் நூறு ஆயிரங்களுக்கு சமமான ஒரு எண். நூறு இலட்சங்கள் சேர்ந்து ஒரு கோடியாகும், இது, இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் பழங்கால எண்ணிக்கை முறையாகும். இம்முறையில் எண்களை எழுதும் போது, எண்களுக்கு இடையே தடுப்பான்களை பயன்படுத்தும் இடங்களும் மாறுபடுகின்றன. மேலும் இது அளவைக் குறிப்பிடவும் பயன்படுத்தப்படுகிறது, உதாரணமாக "Lakhs of people" (Lakhs லட்சக்கணக்கான) லட்சக்கணக்கான மக்கள் என்பதை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. (லட்சக்கணக்கான இது பொருளாதார பயன்பாட்டிற்கு அல்ல.)
இலட்சம் என்பதற்கு பதிலாக இலகாரம்[1] என்று எழுதுதல் தூய தமிழ் என்று கருதப்படுகிறது.
Remove ads
மேல் நாட்டு முறையில் பெரிய எண்களை எழுதும் போது ஆயிரம் ஆயிரமாகப் பிரித்துக் காட்டுவது வழக்கு. ஆயிரம் (1,000), மில்லியன் (1,000 x 1,000), பில்லியன் (1,000 x 1,000 x 1,000) என்றவாறு ஆயிரத்தின் மடங்குகளுக்கே தனிப் பெயர்களும் உள்ளன. ஆனால், இந்திய முறையில் ஆயிரம் (1,000), இலட்சம் (100 x 1,000), கோடி (100 x 100 x 1,000) ஆயிரத்தின் நூற்று மடங்குகளுக்கே தனிப்பெயர்கள் உள்ளன. இதனால், இந்திய முறையில் ஆயிரத்துக்குப் பின் நூறு நூறாகவே பிரித்துக் காட்டுவது வழக்கம்.
Remove ads
மேற்கோள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads