இலால்மணி மிசுரா

From Wikipedia, the free encyclopedia

இலால்மணி மிசுரா
Remove ads

இலால்மணி மிசுரா (Lalmani Misra) (11 ஆகத்து 1924 - 17 சூலை 1979) ஒரு சிறந்த இந்திய பாரம்பரிய இசைக் கலைஞர் ஆவார். [1]

Thumb
ஏப்ரல் 1932 இல் குழுவுடன் பெர்லினில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இலால்மணி மிசுரா

இசையில் துவக்கம்

பண்டிட் சங்கர் பட் மற்றும் முன்சி பிரிகுநாத் லால் ஆகியோரின் பாரம்பரியத்தில் லால்மணி துருவபாதா (துருபாத்) இசையைக் கற்றுக்கொண்டார். இராம்பூர் சேனி கரானாவின் (பள்ளி) உஸ்தாத் வசீர் கானின் சீடரான உஸ்தாத் மெகந்தி உசேன் கானுடன் கியால் பாடுவதைக் கற்றுக்கொண்டார். சுவாமி பிரமோதானந்திடமிருந்து துருபாத், கூட்டு வழிபாடு, கைம்முரசு இணை ஆகியவற்றில் பயிற்சி பெற்றார். சுக்தேவ் ராயிடமிருந்து சித்தார் கற்றார். உஸ்தாத் அமீர் அலிகானின் பயிற்சியின் கீழ் அவர் பல இசைக்கருவிகளை முழுமையாக்கினார்.

இவர், கொல்கத்தாவின் செகன்சாகி ஒலிப்பதிவு நிறுவனத்தில் உதவி இசை இயக்குநர் பதவியில் தனது பன்னிரெண்டாவது வயதில் நியமிக்கப்பட்டார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பல படங்களில் பணியாற்றினார். இந்த இரண்டிலுமான இவரது தொடர்பு, இசைக்குழுவை உருவாககும் ஆர்வத்தைத் தூண்டியது.

Remove ads

மேற்கோள்கள்

மேலும் பார்க்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads